Saturday, December 10, 2011

அறம் பாடும் பிடாதிபதியும் குட்டிகளை பகையாக்கி ஆட்டை கொண்டாடும் மாயப்புனைவுகளும்


அறம் பாடும் பிடாதிபதியும் குட்டிகளை பகையாக்கி ஆட்டை கொண்டாடும் மாயப்புனைவுகளும்...
     
      மனித உடல் படைப்பு முழுச்சுதந்திர இயக்கம் கிடைக்கப்பெற்ற படைப்பாக இயற்கையில் படைப்பின் மூலம் பரிணமிக்க வைத்துள்ளது. உடல், மனம், உணர்வு,  மற்றும சக்திநிலைக் கூறுகளின் அடிப்படையில் அது இயங்கும். புறத்தளத்தில் அதன் வினைவிளைவை எதிர்கொள்ளும் மனம் உணர்வுத்தளங்களில் தனது சக்திநிலை செயல்பாடுகளினால் புறநிலையை மாற்றும் முழு திறனும்  சுதந்திரமும் கொண்ட படைப்பாக மனித உடல் உள்ளது. அதன் புரிதல் தளத்தில் தொகுப்புகளாக்கப்பட்ட  உடல் குழுக்கள்  புறத்தில் பௌதீக மாற்றங்களை  ஏற்படுத்த  முரண் கொண்ட  இயற்கை சமன்பாடுகளை மீள் உருவாக்கம் செய்து கொள்ள அதில் வினையாற்றும் காரணிகளைப் பகுப்பாய்வு செய்து அதன்மீது வினையாற்றும் குழுக்களை உருவாக்கி வினையாற்றும் மாற்றம் விழைகிறது. அவ்வகையில் தொகுப்புகளான உடலியக்கத்தின் புறத்தில் செயல்படும் உறவுகள் முரண்களில் அதிகாரச் செயல்பாடுகள் முதலியவற்றை சரியாக புரிந்து கொள்ளவும் செயலாற்றவும் மர்க்சியம் தெளிவான பாதையை வழங்கி நிரூபணப்படுத்தியுள்ளது. பொருளியியல் முரண்களிலான உறவுகளில் மானுட உடல்கள் தொகுப்பு கையாளப்படும் அதிகாரம், குழு முரண்கள் பற்றிப் பார்வையை மார்க்சியம் தான் தந்திருக்கின்றது. இது ஜெயமோகன் உள்ளிட்ட பரிவாரதேவதைகளாலும் பெருங்குழுவாலும் வழிமொழியப் பட்டிருக்கிறது. இந்த அடிப்படையை ஏற்றுக்கொண்ட எல்லா உடல்களுக்குள்ளும் ஒரேவித பௌதீக வேதி வினைகள் நிகழும் என்று  எதிர்பார்ப்பதும் நிகழுகின்றன என்று அறுதியிடுவதும் படைப்பை அதன் நுட்பத்தை உணரவில்லை என்பதே உண்மை.  இதில் அழகு,அசிங்கம் என்ற இருமை நிலை மூலத்தில் உள்ளதா? அந்த மூலத்தை  ஏற்று வினையாற்றும் உடல்கள் சார்ந்ததா? உவப்பளிப்பது அழகு, ஒவ்வாமை அசிங்கமா? உவப்பும் ஒவ்வாமையும் பொதுத்தன்மை இல்லை. இதில் இயங்கும் அதிகாரங்கள் வெவ்வேறானவை.அழகு X அசிங்கம் என்ற ரசனைவாதத்திற்குட்பட்டதல்ல மார்க்சியம். வாசக உடலின் உணர்வுகளில் அதிர்ச்சி மதிப்பீடுகளை அளவெடுக்கும் நுட்பத்திற்கு ஜெயமோகனுக்கு பயன்படுகிறது என்ற அளவில் தலைப்பு உள்ளது. வாழ்க்கைக்கும் கலைக்குமான உணர்வு இப்படித்தான் ஜெயமோகனுக்கு பிடிபடுகிறது.
            இறந்தகால நிகழ்வுகளில் இன்பமாக உணர்ந்ததை எல்லாம் பதிவாக நிகழ்காலத்தில் அதை நீட்டிக்கும் இன்பநாட்டம் கொண்டது மனம். அந்த நீட்சியினால் நிகழ்காலத்தில் கூட இறந்த காலத்திலேயே வாழும் தன்மையுடன் மனம் செயல்பட்டு, அடையாளப்படுத்திக்கொண்டு உடல் இயக்கம்கொள்கிறது.அவ்வகை நீட்சி இயக்கத்திற்கு புனைவுகளும்,கதைகளும் தேவைப்படும் மயக்க நிலையை தோற்றுவிக்கின்றன. நிகழ்காலத்தில் வாழாமல் இறந்தகாலத்தில் வாழ்ந்து விடுதலை பெறாத மனதை தான அவை நிலை கொள்ள வைக்கின்றன.புனைவு கதைகளில் ஒருவர் தேர்ந்தவர் என்றால் இறந்தகாலத்திலேயே நம்மை வாழ வைத்து விடுதலையடையா மனதை போற்றும் மயக்க வித்தகர் என்று தான் கூறமுடியும். நிகழ்காலத்தில் வாழவும் முரண்களில் இயங்கி புறநிலையை மாற்றவும் மார்க்சிய-லெலினியம் வழி கூறுகிறது. இது மொழித்தளத்தில் விரிந்து இயங்கும் போது பிரச்சாரமாகப் போவது பல வேளைகளில் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.
   பொருளியல் விதிகள் இயங்கு தளத்திற்கு ஏற்ப வினைவிளைவுகளை ஏற்படுத்தலாம். ஆனால் அதன் பொதுத்தன்மை ஒன்றுதான். வரலாற்று நிகழ்வுகள் என்று குறிக்கும்போது வரலாறு பற்றியும்  அங்கு உடல்களின் வினையாட்டங்கள் பற்றியும் புரிதலிலேயே நிகழ்வுகளை விவரிக்க முடியும். இயற்கை முரண்கள் உடையது. புலன் சார்ந்த வாழ்வியல் இயக்கம் இருமை உடையது. இதன் அடிப்டையில் நிகழ்வுகளும் இருமை உடையது. பொருளியல் முரண்களும் அதன் விளைவுகளும் இருமை நிலையை தோற்றுவிக்கும் நிகழ்வுகளை, இறந்தகாலங்களின் தொகுப்பில் உடல் குழு தொகுப்புகள் நிகழ்த்திய வினைகளின் விளக்கம் மார்க்சிய பார்வை அடிப்படையில் சரியானது என நிரூபிக்கப்பட்டு உள்ளது. 
 புறத்தின் மீது வினை நிகழ்த்தும் உடலின் அகநிலைத் தன்மையை மார்க்சியம் மறுப்பதாக கூற இயலாது. ஆளுமையின் நுட்பத்தை இயங்கியலாகவே பார்க்கிறது. உடல்களின தொகுப்புகள்  இன்பநாட்டத்திற்கு நிறுவிய இறந்தகால கூறுகளை நீட்டிக்கும் பண்பாட்டுக் காரணிகளின் மையத்தை அது நிராகரிக்கவில்லை.  
 அரசியல்,பண்பாடு என்பவை அதிகாரம் சார்ந்தவைகளே அதிகாரம் முரண்களில் பிறப்பதே, உடல்களின் தொகுப்பில் புறம் சார்ந்த காரணிகளின் விழைவுகள் மீது இருமை வினையாற்ற அதிகாரங்கள்  பயன்படுகின்றன. அதிகார உற்பத்தி அதன் செயல்பாட்டின் பொருளியல் முரண்கள் எவ்வகை வினை நிகழ்த்துகின்றன என்பதற்கு மார்க்சிய கோட்பாட்டை ‘வாய்பாடக’ யாவராலும் முன்வைக்கப்படுவதில்லை மார்க்சியர்களாக ஜெயமோகனால் முன்மொழியப்படுபவர்கள் அப்படிப்பட்டவர்களாக இருக்ககூடும்.
 இயற்கை இருமைகளின் போராட்டம் என்றால், பொருளியல் முரண்களின் போராட்டத்தை அரசியலாக அணுகி, அதிகாரச் செயல்பாடுகளில் வினை எதிர் வினையாற்றும் வழித்தடத்தை மொழியும் மார்க்சியம், மாற்றுத் தரப்பு என்று குறிப்பிடப்படும் எதிர்நிலையை அதன் தன்மையில் தானே பார்க்க முடியும். நடுநிலை என்று ஒன்று இல்லை என்பதே அதிகாரச் செயல்வினைகளின் விளைவு.  
 எல்லா நிகழ்வுகளிலும் விதிகள் இயங்குகின்றன. வரலாறு என்று உடல்கள் நிகழ்த்தும் பௌதீக வினைகளிலும் விதிகள் இயங்கத்தான் செய்கின்றன. இதில் மாறாத்தன்மையுடன் வெவ்வேறு  தளங்களில் அவை வினையாற்றுவதும் காலங்கள் கடந்து வினைவிளைவுகள் அவ்விதிக்குட்பட்டுதான் உள்ளதும் உண்மை. மார்க்சியம் வரலாற்று நிகழ்வுகளின் மீதான பார்வையில் அதன் இயக்கத்தையும், தன்மையையும் விதிகட்குட்பட்டு விவரிப்பதை ஏற்காமாலிருக்க முடியாது.  
       விதிகள் போக்கை தீர்மானிக்கின்றன என்பது படைப்பின் இயங்கியல்,ஆற்றல்களின் மூலமான பேராற்றலால் (கடவுளால்) தான் போக்குகளின் விதியை மாற்ற முடியும் என்று நீங்கள் உணர்ந்தால்  அதை வெளிப்படையாக அறிவிப்பதில் உங்களுக்கு தடையுள்ளதா? மார்க்சியம் புலன்-பொருள் சார்ந்து அறிந்த நிரூபிக்கப்பட்ட மனித ஆற்றல்களின் இயக்கப் போக்குகளை மட்டுமே கணக்கில் கொண்டு பேசுகின்றது. மார்க்சியத்தின் அடிப்படையில் விரிவடையும் அதிகாரச் செயல்பாடுகளை வளப்படுத்தி, உடல் குழுக்கள் தொப்பையும் அதன் இயக்க  இயங்கியலையும், அதன் எல்லையை விரித்து காட்டியதில் லெனியத்தின் பங்கு சிறப்புடையதானதாலேயே மார்க்சிய-லெலினியம் என்று விளிக்கப்படுகிறது. கருத்தை களத்தில் நிருபணமாக்கியதில் லெலினியத்தின் பங்கை மார்க்சியர்கள் மறுப்பதில்லை.  
 எல்லா எழுத்துகளிலும் ஒரு அதிகாரம் இயங்குகின்றது. அவ்வதிகாரம் எதை சார்ந்ததாக இருக்கிறது என்பதிலிருந்து அதன் தன்மை நிர்ணயம் ஆகும். அவ்வகையில் பொருளியியல் முரண்களின் இருமைநிலையில் ஏதோ ஒன்றை சார்ந்துதான் ஒவ்வொரு எழுத்தும் நேரடியாகவோ மறைமுகமாகவோ இயங்குகின்றன. வரலாற்றெழுத்தும் ஏதோ ஒரு அதிகாரம் சார்ந்தே உள்ளன. அதிகாரம் செயலாற்றாத வெளி ஏதேனும் உண்டானால் அங்கு சார்பில்லா படைப்புகளும் சாத்தியம். நுண்மையின்  நுட்பத்துடன்  அதிகாரங்கள்  விரிக்கப்படுகின்றன என்பதே  இயங்கியல்  உண்மை.  
       ஜெயமோகன் தலை ஒரு விஷயத்தில் X-Y இரண்டு கோட்டிலும் ஆடுகின்றது. ‘‘நினைத்தாலே இனிக்கும்’’ திரைப்படத்தில் கதாநாயகி தலையாட்டும் காட்சியே ஜெயமோகனின் " அசிங்கமான மார்சியர்கள் " பதிவு கண்டவுடன் நினைவில் ஒடிநிற்கிறது.வரலாற்றில் குட்டிகளை பகையாக்கி ஆட்டை கொண்டாடி தொடரும் அதிகாரம் இதிலும் தன் முகம் காட்டதான் செய்கிறது.  

Tuesday, December 6, 2011

உடல் திண்ணும் தகவல் பாசக்கயிறுகள்.


உடல் திண்ணும் தகவல் பாசக்கயிறுகள்

                முல்லைப் பெரியார் அணையின்  உறுதித்தன்மை   குறித்து இரு  மாநில அரசுகளும் அறிவார்ந்த சமூகம் என சொல்லிக் கொள்பவர்களும் இருவேறு  கருத்துக்களை கூறிவருகின்றனர். கேரள மாநில  மனித உரிமைகள்  ஆணையத் தலைவர்  நீதிபதி ஜெ.பி.கோஷி  ‘‘தற்பொழுது  நடைபெறுவது  ஊடகங்கள் மற்றும் சில தலைவர்களின் தேவையற்ற உள்நோக்கம் கொண்ட செயல்பாடுகள்’’என்ற  கருத்தை சொல்லுகிறார்.   இரு மாநில ஆர்வங்களின்  தொகுப்புகள்   இணைந்து  ஆவணப்படம்  வெளியிட்டுக்  கொண்டுள்ளன.  அதில் பொங்கும்   உணர்வுகளை  கொண்டு  பொருள் ஆதாயம்  வேண்டி ‘‘டேம்  999’’ திரைப்படம் வந்து விட்டது. அது தமிழக அரசால் திரையிட தடைசெய்யப்பட்டு பாராளுமன்றத்தில் அமளியை வேறு ஏற்படுத்தியது.   நீதித்துறை தலைமை நிறுவனமான உச்சநீதிமன்றத்தின் ஆணைகள் கூட  நடைமுறைபடுத்தும்  சாத்தியமற்ற  சூழலை  பீதிகொள்ள வைக்கும்  தகவல் செயல்பாடுகள்  நிகழ்த்துகின்றன.  இதில் தமிழ்மொழி பேசும்  உடல்கள்  மலையாள மொழிபேசும் உடல்களாக இரு முகாம்களின் லாவணி  தொடருகின்றன.  இந்த நிலை  அணுமின் நிலையங்கள்,  உள் நாட்டு பாதுகாப்பு, தீவிரவாதம், பன்நாட்டு மூலதன திரட்சியின் குவியல் பற்றியதான தலைப்புகளிலும் தொடர்கின்றது. தகவல் ஆளும் அதிகாரம் பற்றிய  நுண்பொருளுக்குள் நுழைய வேண்டிய தகவலைச் சூழல் உற்பத்தி  செய்துள்ளது.
                தகவல்  உருவாக்கம்,  பரிமாற்றம், செயல்தளம்,  வினை, எதிர்வினை  மறு உருவாக்கம்  என்ற தளங்களில்  நகர்ந்தால் அவைகளின்  தேவைபற்றிய  பார்வை முதன்மையாகிறது. அகம் மற்றும் புறம் சார்ந்த பல்வேறு  அதிகாரங்களை  நிறுவி,  தக்க வைத்து  மீள் உருவாக்கம்  செய்யும்  அங்கு வினையாற்றும் உடல்களை  கையாள வேண்டிய  நிறுவனப்படுத்தப்பட்ட  செயல்களுக்கு  தகவல்களும் பரிமாற்றமும்  அவசியமாகின்றன.
                இந்த அவசியத்தை நிகழ்த்த அதுசார்பான நிறுவனங்களும்  அவசியமாகின்றன.  இதில் காட்சிபுலன் சாரும் நிறுவனம் தலைமைப் பங்காற்றுகின்றது. மொழியமைப்புக்குள்  செழுமையாக  நிறுவப்பட்ட  உடல்களின் மீதான  அதிகாரச் செயல்பாடுகளை  அந்த கருவியைக் கொண்டு  காட்சி புலன் சார்ந்த ஊடகங்கள்  மூலம் தகவல்  அவ்வுடலுக்குள்  கடத்தி ஆள்வதும் அது கட்டமைக்கப்பட்ட  செயல் தளத்தில்  வினை- எதிர்வினையாற்றவும்,  பெற்ற தகவல்களை  அதன் தன்மைக்கேற்ப கடத்தியும், சிதைந்தும்,   சேர்த்தும்  மீள் உருவாக்கம்  செய்யவும்,   அதில் தன் இன்ப  நாட்டத்தை  நீட்டிக்கொள்ளவும்,   புதிய தகவல்களைத்  தேடி தன்  அடையாளத்திற்குள்  தினித்துக் கொள்ளவும்  அதிகாரம் பெற்ற  உடல்களாக  உணர்ந்து கொள்ளவும் சுதந்திரம் அளிக்கப்பட்ட  அமைப்பில் அவை  உலவிடப்பட்டுள்ளன.  ஒவ்வொரு உடலும்  அதன் தன்மைக்கேற்ப  தகவல்  கடத்திகளாக  செயலாற்றுகின்றன.  ஒரே வகையான  அதிகாரத்தின் கீழ் கட்டப்பட்டிருந்தாலும் எதை இன்பமெனும் அடையாளம்  கொள்கிறதோ அதோடு ஒட்டிக்கொள்ளவும்  அதன்  தொடர்நிகழ்வு  நோக்கி நகரவும்,  நிகழ்வுகள் நீட்சிகொள்ள வினையாற்றவும் பொது அதிகாரத்திற்கு உட்பட்ட  உள் அதிகாரம் கொண்ட மனங்களின் சுதந்திரம் வாய்க்கப்பட்ட உடல்கள் தான் அடையாளத்தோhடு தகவல் கடத்தி தகவல் தொகுப்புகளாக வாழ்கின்றன.  தகவல்களையும்  அதன் இன்ப நுகர்ச்சிகளைத்  தேர்வு செய்யவும்,   நுகரவும், பதிவு, பரிமாற்றம் முரண்வினையாற்றுதலுக்கு சுதந்திரம் பெற்ற உடல்களாக  கட்டமைக்கப் பட்டிருந்தாலும் அதன் அதிகார  எல்லையை  பொது அமைப்பு  அதிகாரமே  தீர்மானிக்கின்றது.
                எந்த ஒரு  தகவலும் தன்மையில் சுதந்திரமானவை அல்ல. ஏதோ  ஒரு அதிகாரத்தின்  வினையாகவே  முகிழ்கின்றன. சுதந்திரமில்லாத  தகவல்கள்  அதன் தன்மையிலேயே  புதிய  தகவல்கள்  உருவாகத்திற்கு துணை நிற்கின்றன.  உடல்களின்  பௌதீகவேதி  வினைகள் சார்ந்தும்  தகவல்களின்  பரிமாணம்  மற்றும் அதன்  செயல்பாடுகள் அமைகின்றன.
                ஒரே  பொருளியல்  முரண்கள்  கொண்ட புறச்சூழலில்  கூட வெவ்வேறு  தகவல் தொகுப்பின்  கீழ் உடல்களின் இயக்கங்கள்  உள் முரண்  கொண்டு  கட்டமைக்க முடிகின்றது. இதில் ஊடகங்கள்  அதீத செயலாற்றுகின்றன.  புலன் சார்ந்து  தொகுக்கப்படும்  தகவல்களில்   காட்சிபுலன்  சார்ந்து தொகுக்கப்படும்  தகவல்கள் உடலில்  அதிக  பௌதீகவேதி  மாற்றங்களை  கொணர்ந்து  பதிவு கொள்கின்றன.  பொருளியியல்  முரண்யாளுகையினால்  சிதைக்கப்பட்ட  மனம் இன்ப நாட்டங்களின்  தொடர் நிகழ்வுகளில்  சலிப்புற்று  மையங்களை   மாற்ற விழையும்.  அதற்கு கலை  இலக்கிய தகவல்  தொகுப்பும்,   பூடகத்தன்மையுடைய  அதிர்ச்சியூட்டும்  மையங்களை  தொட  நிறுவப்பட்ட  அதிகாரத்திற்குள்ளேயே  இயங்கும்  போக்கை  நோக்கி நகரும்  சுதந்திரத்திற்காக  முனையும். அதற்கான தகவல்  தொகுப்புகளின் தேவை ஊடகங்களின்  வாழ்வாதாரமாகின்றது.   இங்கு பால்  இன  பிரிவினைகளின்  முரண்  நுட்பம் சார்ந்த புலணுர்ச்சி  அடிப்படையில்  தகவல் பரிமாற்றத்தின்  பரிமானங்கள்  இயக்கப்படுகின்றன.
                      ஊடகங்கள்  குறிப்பிட்ட  அதிகாரம் பெற்ற நிறுவனங்களாக  உடல்களுக்கு  தகவல் தீனிபோடும் அதிகாரம் பெற்ற நிறுவனங்களாக விளங்குகின்றன.  பொருளியியல் முரண் அமைப்பையும்  அதன்  உள் முரண்களையும்  தக்கவைத்துக் கொள்ளும் வகையில்  போட்டிகளை  நிறுவி,  தகவல்களை  உடலில் கடத்தி, உடல் ஊடாடிய தகவலின் மீள் உருவாக்கத்தின்  மீது வினையாற்றியும்  பொருளியில்  திரட்சிக்கு  உடல்களை  தகவல் தொகுப்பின் சுமைதாங்கிகளாகவும்,   கடத்திகளாகவும்  இன்றைய ஊடகங்கள்  மாற்றி அரசியல்  வினை நிகழ்த்துகின்றன. தமிழர்,   மலையாளி  என்று  மொழி தளத்தின்  கீழ் அதிகாரப்படுத்தப்பட்ட உடல்களை  இந்தியா- இந்தியர்  என்ற  அதிகாரத்தின் கீழ்  நிறுவனப்படுத்தும்  போக்கில் உள் முரண்களினால்   அரசு நிறுவனம் தன் பொருளியியல்  முரண்சார்  அமைப்பு ஆர்வங்களை  ஒளித்து வைத்துக் கொண்டு தகவல்கள் கடத்தும் உடல்களின் குழுவை உள் முரண்களுக்கு  அப்பாற்பட்டு  பொது தளத்தில் இயக்குவதற்காக  உள் அமைப்புகள் பற்றிய  தகவல்கள்  மீதான  நம்பிக்கையை  நீட்டிக்கை  செய்யும் தகவல்   தொகுப்பை பரப்பும் வேலை செய்கிறது. அதன் ஆர்வங்களின் அதிகாரத்தின் கீழ்  எல்லை மீறா   தகவல் தொகுப்புகளை  உருவாக்கி, பரப்பி,  மீள் உருவாக்கம்  செய்து   உடலாளும்  உள்கட்டு  அதிகாரங்களை தன் கண்காணிப்பிற்குள்  வைக்கும் பெரும் அதிகாரமாக  அரசும் அதற்காக  தகவல்களால் நிறுவப்பட்ட  உடல்களும்  இயங்குகின்றன.  
                தகவல் தொகுப்புதான் அறிவு, அறிவுதான்  மதி நுட்பம் என்ற  கருத்து செலுத்தும் அதிகாரம் பெரும் ஊடக அரசியல் விளையாட்டுக் களத்தை உருவாக்கியுள்ளது.   முல்லைப்பெரியார்  அணை பிரச்சனையில்  பொறியியல், புவியியல் சார்ந்த தகவல்கள் பூடகமான நுட்பானதாக புறம் சார்ந்த பௌதீக  வினைகளுடையதாக  உள்ளதால்  அந்த நுட்பம்  உணரா உடல்களில்  தான் இன்பம் என்று  உணர்ந்து  அடையாளப்படுத்திக் கொண்ட  வகைகளினின்றும்  அவ்வுடல் அந்நியப்படும் பிரமைகளை  உருவாக்கி,  அதிர்ச்சியூட்டுதலில்  ஊடகங்களின்  வெற்றி புறநிலையில் நிலவும்  சமன்பாடுகளை  தகர்க்கின்றன.  அந்த அபாயம் இந்த அணை  விஷயத்திலும் நடந்து வருகின்றன. புவியியல், நீரியியல், நீர்நிலையியல், கட்டுமானவியலின் நுட்பத்தின் அதிகார செயல்வினைத்  தொகுப்பை  ஆய்வுட்படுத்தும்  உடல்களுக்கிடையேயான  முரண்களை,  அவ்வகை தகவல்களை  பூடகமாக, புதியதாக  குழப்பமாக   உணரும்  உடல்களுக்கு  கடத்தி,   அதை பொதுதளத்திற்கு நகர்த்தும்   முயற்சிகள்  தொடருகின்றன.  தகவல்கள்  புரிதல் தளத்திற்கு  விரிவு கொள்ளும்  கால இடைவெளியில்  வெவ்வேறு  அதிகாரங்கள்  அது சேரும் உடல்களில் வினை நிகழ்த்தி  உறைகின்றன.
                ஒரு தகவல்  நிகழ்த்தும்  வினைகளுக்கு  உட்பட்டு இயங்கும்  உடல்கள் நிறுவப்பட்ட  அதிகாரத்தை மீறும்   போக்கு  தற்செயலாகவோ  திட்டமிட்டோ  நடந்தால்  அதை மாற்றி அமைக்க  நிறுவனப்படுத்தப்பட்ட  மாற்று தகவலின்  தொகுப்பை,  அவைகளின்  பிரதான  ஆர்வத்தை  நீட்சி கொள்ளும்  வகையில்  உடல்களுக்கு  கடத்தப்பட வேண்டிய  நுட்பம் கொண்ட தகவல்   தொடர்பை கண்காணிப்பு  அமைப்புகள்  செய்கின்றன.
                நிலவும்  முரண்கள்  தோற்றுவிக்கும்  புறநெருக்கடிகளில்   இயங்கும் உடல்கள்  புரியும்  பௌதீக  வினைகளின்  மையங்களை  மாற்ற தகவல்கள்  மயக்கம் என்ற  வேதி வினைகளுக்கு உடல்கள் ஆட்படுத்தப்படுகின்றன. அந்த வகையில்  பிரதானமாகும் பிரச்சனைகளான  பேருந்து கட்டணம்,  பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு,  அணுகதிர் பாதிப்பு,  துப்பாக்கி சூடு  தகவல்களால்   அதிர்ச்சியுறும்  உடல்களில்  அந்த மையத்தை மாற்றியமைக்க முல்லைப் பெரியார் அணை பிரச்சனை நிறுவனப்படுத்தப்பட்ட அதிகாரத்திற்கு  உதவுகின்றது.  இரு குழுக்களின்  இன்ப நாட்டங்களின்  மையத்தை  உள் முரண்களின்  அதிகாரப்  போட்டிகளை  நீட்டித்து  அதன் வீரியத்தை   குறைக்காமலிருக்க  அந்த மையமே  போட்டிக்கான  மையமாக  நீட்டிக்கச் செய்வதன்  மூலம் தன்னை  ஆளும்  பெரும்  அதிகாரத்தின்  மையத்தை  உணரத்  தலைப்படா  உடல்களின்  சூத்திரதாரியாவதே  ஊடகங்களின்  அரசியல்   அது இந்த  அணைப்பிரச்சனையிலும்  நீடிக்கின்றது.

                புலன் சார்ந்து இயங்கும்  உடலியக்கத்தில்  திணிக்கப்படும்  காலம் இடம்  சார்ந்த தகவல் நுட்பம்  அது இயங்க வேண்டிய  அதிகார மையங்களை மாற்றி, மாற்றி  செயலாற்றிக் கொண்டே  திருவிளையாட்டை  தொடருகின்றன.  இன்றைய புறம்  சார்ந்த வாழ்வியல்   இயக்கம்  தகவல் திண்ணும்  உடல்களோடு  நகருகின்றது