Sunday, April 5, 2015

வலியுணர்த்தும் திருவிளையாடல் கோமல்.

கோமல்- வலியுணர்த்தும் திருவிளையாடல்.

இன்னைக்கு அந்த டெயில்ஸ் ஒட்டுர வேலையை முடிச்சிடுங்க.,

இல்ல சார் அது முடியாது. ஆறு பாக்ஸ் பன்னென்டுக்கு எட்டு டெயில்ஸ் குறையுது-
தேவையானதை அளந்து தானே வாங்கியது, எப்படி குறஞ்சுது,

கொண்டுவரும் போது டிரன்ஸ்போட்டுலயும் எறக்கும் போதும் உடைந்திருக்கு,
சரி, கடையிலிருந்து சப்ளை செய்ய சொல்லுரேன்,

ஹேலோ, அருண் டெல்ஸ் சோமானியில மாடல் 12 கான்சப்ட் டெயில்ஸ்ல பாடி டெயில்ஸ் ஆறு பாக்ஸ் வேணும்,

சார், ஒரு நிமிஷம் ஸ்டாக் பார்த்து சொல்லுரேன்
,
சாரி சார் அந்த டெயில்ஸ் ஸ்டாக் இல்ல, அந்த டயிப் புரடெக்‌ஷன் நிறுத்திட்டாங்க வேறு யாருகிட்டயாவது ஸ்டாக் இருக்கான்னு செக் பண்ணிட்டு சொல்லுகிறென். வேணுமின்னா அதே மாதிரி மாடல் ஜான்சனில் இருக்கு கலந்து ஒட்டுங்க,பார்த்தா சட்டுன்னு தெரியாது கொஞ்சம் தான் வித்தியாசம் இருக்கும்.

இல்ல சார் அதான் வேணும் கொஞ்சம் வேறு யாரிடமாவது ஸ்டாக் இருக்கான்னு செக் பண்ணுங்க,

ஹேலோ...செல்வம் ஏஜென்சி,,.............இருக்கா ?
ஹேலோ....மாருதி டெயில்ஸ்..............இருக்கா ?
ஹேலோ...நவீன் டெயில்ஸ்.................இருக்கா ?

ஏன்ப்பா இப்படி உயிர வாங்கிருங்க ! ஒருத்தனும் அந்த கல்லு இல்லங்கிரான், பாதிவேளையில இப்படி சொன்னா எப்படி ? இதையெல்லாம் ஆரம்பிக்கிரக்கிரத்துக்கு முன்னாடி சொல்லரது இல்லையா ? இந்த சூப்பிரவைஸ்சர் வேலை செய்யறதுக்கு.....நிம்மதியா உக்காந்து .........லாம்!!!

வேறு எது பண்ணினாலும் சூட்டாகாது, இன்ஜினியர் பார்த்து பார்த்து எடுத்து கொடுத்த டிசைன்....தலையிலதான் அடிச்சுக்கணும்......?

இந்த அனுபவம் உங்களில் சில பேருக்காவது நிகழ்ந்திருக்கும்.
ஒரு சின்ன டெயில்ஸ் விஷயமே இப்படி உலைச்சலில் விடுகிற்து.

அப்பன், பாட்டன், பூட்டன் காலத்தை விட தகவல் தொடர்பும் போக்குவரத்தும் பிரமாண்டமாக வளர்ச்சியடந்து விட்டது.

ஆனால் நினைத்ததை நினைத்தமாதிரி முடிப்பதில் ஆயிரம் சிக்கல்களை சந்திக்கிறோம்.
ஒரு பாக்ஸ் டெயில்ஸ் வாங்குவது அவ்வளவு சிரமமாக இருக்கிறது.

ஆனால்-

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தேவையான பொருளைக் கண்டுபிடித்து அதை பல மைல் தூரத்திற்கு கொண்டு வந்து ஒரு வேளையை முடிப்பது எவ்வளவு கடினம் என்பது விளங்கிக் கொள்ள முடியும்.

பிரசவித்தவளுக்குத் தான் வலி தெரியும்.

பார்த்துப் பார்த்து அடித்த சிலைகள் பாழாகி கிடக்கிறது.

நின்ற கோலம், கிடந்த கோலம் என உருகொண்ட பெருமாள் ஊருக்கு ஒதுக்குப் புறமாக கிடக்கிறது.

மாட்டாஸ்பத்திரிக்கு அஸ்திவாரம் பரித்த போது கிடைத்தது. ரோட்டில கிடந்தது மனசு கேட்காம இப்படி ஓரமா கொண்டு வந்து போட்டிருக்கோம்!

இது பெரிய லிங்கம் கொட்டாப் போட்டு வத்திருக்கோம்.

இது என்னன்னு தெரியலை என்று அமர்ந்த கோல அம்மனைக் காட்டுகிறார்கள்.

ஏரிக்கறையில இருக்கிற கோவில் பெருசு என சிவன் கோவிலைக் காட்டுகிறார்கள்.

ஏன் இப்படியிருக்கு, பராமரிக்க கூடாதா... நாங்க இந்த அளவுக்கு வத்திருப்பதே பெருசு...இது இல்லாதவர்களுடைய உழைப்பு.... இருப்பவர்கள் திருப்பதிக்கும் திருவண்ணாமலைக்கும் போய்விடுகின்றனர்.

கோமல். கும்பகோணம் ஆடுதுறையிலிருந்து எட்டு கி.மீ, தூரத்தில் வீரசோழன் ஆற்றங்கரை அமைந்த ஊர்.இங்கு தான் இக் கோவில்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு காலத்தில் மிக சிறந்த பெரிய ஊர்.

வீரசோழன் ஆற்றுக்கும் அரசலாற்றிர்க்கும் இடையே மதுரை நோக்கிப் பயணப்பட்ட மாலிக்காபூரின் படையேடுப்பால் அழிந்து போன கோவில்கள் நிறைய உண்டு.

சமணத்தையும் அதன் உருக்களையும் அழித்த வலியை சைவத்திற்கு உணர்த்திய திருவிளையாட்டு.
இருப்பவர்கள் பழையதை பராமரிக்காமல் புதிய புதிய கோவில் கட்டும் விபத்து அங்கேயும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

1 comment:

  1. First. Nandri palla kodi for your time spent on this amazing job. Your effort deserves such a appreciation as it will have impact not jus for this generation but also for the next. Thanks and regards from Singapore.

    ReplyDelete