Thursday, April 9, 2015

எப்படியிருந்த நான் இப்படியாகிட்டேன்.

எப்படியிருந்த நான் இப்படியாகிட்டேன்....!!!

இந்த இராசேந்திரசோழன் ரொம்ப மோசம், என்னை இப்ப்படி பண்ணிட்டார். இவரு அப்பாவும் இப்படித்தான் ஆனாலும் கொஞ்சம் நல்ல மனிதன்.
ஆமாங்க 
நான் சொல்வதில் உள்ள நியாத்தை இதை படிச்சாதான் புரியும்.படைப்புக்கு நான் தான் கடவுள். நான்முகன், பிராஜாபதி, பிரம்மா, விஸ்வகர்மா இப்படி பல பெயரிருந்தாலும் பிரம்மான்னா உடனே புரிஞ்சுடும் எல்லோருக்கும்.

இந்த சிவன், திருமால் எல்லாம் ஏதுங்க?

வேதத்தில நான் தான் கடவுள் அடுத்தது இந்திரன். உடனே திராவிடவரலாற்று ஆராட்சியில் சிந்துவெளிக்கு போயிடாதிங்க, இப்படி பேசியதால் தான் எனக்கிருந்த ஐந்து தலையில ஒரு தலையை சிவன் கிள்ளி எரிஞ்சிட்டார். அன்றிலிருந்து நான்முகனாயிட்டேன். நான்கு திசைக்கும் நான்கு வேதத்திற்கும் ஒவ்வொன்றுக்கும் ஒரு முகம், ஒவ்வொன்றும் வேதத்தை உச்சரிக்கிறது. இந்த முருகன் வேறு பிரணவம் மந்திரம் தெரியவில்லை என்று தலையில் குட்டி கத்து கொடுக்கிறார். கோர்ட், கேசு, பொய் வாக்குமூலம் எல்லோம் நான் தான் ஆரம்பிச்சது உங்கமேல குத்தமில்ல, அன்னைக்கு இந்த தாழம்பூவை வைத்து நான் பொய்சாட்சி சொல்லாமல் விட்டிருந்தால் பெங்களூரு மாதிரி நீளும் வழக்கு இருந்திருக்காது. இன்னும் 466 ஆண்டுகள் வேணும் நீதிமன்றத்தில் தேங்கிகிடக்கும் பணி முடிக்க என் உச்சநீதிமன்ற நீதிபதி புலம்பல் இருந்திருக்காது. பாவம் அந்த தாழ்ம்பூ, அந்த இனமே அருகிவிடும் போலிருக்கு, இப்பொ எல்லாம் மகாசிவராத்திரி நான்காம் காலத்தில் சிவனுக்கு சூட கூட அது கிடைக்க மாட்டேங்கிது, வருஷத்திலே ஒருநாள் ஒரு காலத்திற்கு மட்டுமே அதை சிவனுக்கு சூட்டுகிறார்கள்.

கிராதயுகம், திராதயுகம், துவாபரயுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களைக் கூட்டினால் நாற்பத்தி மூன்று லட்சத்து இருபதாயிரம் ஆண்டு வரும் இது எனக்கு ஒரு வருஷம் இப்படி நூறு வருஷம் போன அதாவது 43,20,000 X 100 = 43,20,00000. இந்த நாற்பத்தி மூன்று கோடியே இருபது லட்சம் ஆண்டு தான் எனது ஆயுள்.

எனக்கு தனி கோவில் கிடையாது. கும்பகோணத்தில், ராஜஸ்தான் புஷ்கர், நேபாளத்தில் சின்ன சின்னதா வடஇந்தியாவில் கோவில்கள் உண்டு. கும்பகோணத்தில் மூன்று கால புஜை நடக்குது. திருப்பட்டூர்,திருக்கண்டியூர்,உத்தமர்கோயில்,கொடுமுடி,திருநெல்வேலி பிரம்மதேசம், இந்த ஊரில் இருக்கும் சிவன்கோயில்களில் தனி சன்னதிகள் உண்டு.

என்னை சிவன் கோவில் தேவகோட்டத்தில் வடபுரத்தில் அபிஷெக நீர் ஊற்றும் சாளவத்தின் மேல்பாகத்தில் பார்க்க முடியும்.. எனது நின்றகோலம் தான் பெரும்பான்மையான காலத்தின் கலைபாணி. அமர்ந்த கோலம் சில இடத்தில் உண்டு.பல்லவர்கள் என்னை எவ்வளவு அழகாக வடித்தார்கள். சோழர்களில் பல்லவர்பாணியில் ஆதித்தசோழன் காலத்தில் கீழையுரில் ( கி.பி.884 ) எனக்கு அழகான உருவம் கொடுத்து சிலைவடித்தார்கள் பழுவேட்டரையர். எனது முகம் எனது சற்று நீண்ட மகுடத்தால் அழகாக 

No comments:

Post a Comment