Saturday, November 17, 2012

தர்மபுரி :கட்டமைக்கப்பட்ட சொல்லின் பொருள் தொலைத்த ஊரும்...கதையாடும் காலமும் - கோமகன்

கட்டமைக்கப்பட்ட சொல்லின் பொருள் தொலைத்த ஊரும்...கதையாடும் காலமும் - கோமகன்

            நிலவும் சுரண்டல் சமூக அமைப்புக்கு ஏதிராக விழிப்புணர்வு பெற்று அமைப்பாக மக்கள் திரண்ட பகுதி தர்மபுரி.வன்னியர்களும் தலித்துகளும் பெரும்பான்மையாக வாழும் பகுதி, வடமாவட்டங்களில் வன்னியை-தலித் சாதிய மோதல்கள் தீவிரமாக இருந்த காலங்களில் கூட அமைதியாக இருந்த பகுதி. இடதுசாரி தீவிரவாத அரசியலால் திரட்டப்பட்ட மக்களால் இது சாத்தியப்பட்டது. இதுவரை இருபத்தி ஐந்து மேற்பட்ட சாதிமறுப்பு திருமணங்கள் நடந்துள்ளது.இரு சமூக மக்களும் கிட்டதட்ட ஒரே பொருளதார அந்தஸ்தில் வாழும் நிலையைக்காணலாம்.வன்னியர்கள் சிறு உடமையாளர்களகவும் தலித்துகள் பெங்களூர்,ஓசூர் போன்ற இடங்களில் வேலை செய்யும் கூலித்தொழிலாளிகளாகவும் இருக்கின்றனர்.   

              வன்னியர்களும் தலித்துகளும் தர்மபுரி மாவட்ட அளவிற்கு அடர்த்தியாக வாழும் அரியலூர், கடலூர் போன்ற வடமாவட்டங்களில் இது போன்ற திட்டமிடப்பட்ட இரு சமுகத்திடையேயான கலவரங்கள் நிகழவில்லை. இது போன்ற காதல் உடன்போக்குகள் சில நடந்து கொண்டுதானிருக்கின்றன. தர்மபுரியில் மட்டும் ஏன் இந்த திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை. இது கிட்டதட்ட நாற்பது நாட்களாக இருந்த பிரச்சனை.சாதிய மோதல்கள் உணர்வின் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை.கண்முடித்தனமான தாக்குதல் குழந்தைகள் கூட தப்புவத்தில்லை, கற்பழிப்புகள், சூறையாடல், தீயிடல் போன்றவை அதன் வெளீப்பாடு.தர்மபுரியில் சூறையாடல்,தீவைத்தலுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.இதன் பின்ணணியை எப்படி சந்தேகிப்பது. சாதிய அமைப்புகள் தீவிர செயலாற்றியிருக்கின்றன என்ற அளவில்தான் கருதமுடிகிறது.

            அப்பகுதியில் மற்ற மாவட்டங்களில் உள்ள அளவிற்கு சாதி மிக கூர்மையானதாக இல்லை. அம்மாவட்டத்தில் மக்களை சாதி ரீதியாக கூர்மயாக துண்டாட வேண்டிய அவசியம் என்ன? உடன்போக்கான பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொள்ளவில்லை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கூற்று உண்மையா? சாதிய மோதல்கள் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டு ஒழுங்காக நிகத்தப்படும் வன்முறையாக இதுவரை பதிவில்லை அதற்கான சத்தியங்களும் குறைவு.முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு ஆதிக்க படிநிலையில் மேல் நிலையிலுள்ள சாதி தன் கீழ் உள்ள சாதியை பொருளாதார ரீதியாக அதன் உடமைகளை அழிக்கும் புது வடிவத்தை கைகொண்டிருக்கிறது.

            சாதியும் தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கு ஆதாரமாகக் கொண்டுள்ள பரம்பரைத் தொழிற் பிரிவினையும் அவை நிலைத்து நிற்பதற்கான சேவை செய்யும் அகமண முறை, உயர்வு தாழ்வு கற்பித்தல், படிநிலை முறை, பரம்பரை சடங்ககுகள் ஆகியவையாகும்.இது நிலவுடமையின் தன்மை, இந்திய சமூகத்தை எதேச்சதிகாரமிக்கதாக ஆக்குகிறது.இதன் வடிவமாக அரசும் அதன் நிறுவனமும் விளங்குகிறது.இந்த அரசில் பங்குகொள்ளும் கட்சிகளின் தன்மையும் இதைத்தான் பிரதிபலிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. இதற்கு ஏகபோக மூலதனமும் தன் நலனுக்கு ஆதரவாக அமைகிறது.சாதிய கட்டமைப்பை தக்கவைத்து கொள்ள பரம்பரை தொழிற்பிரிவினையையும் அகமண முறையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தம்,நெருக்கடி அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.

           தர்மபுரி தலித் மக்கள் பாரம்பரிய தொழிலில் இருந்து விலகியதும் அகமண முறைக்கு எதிராகவும் மாறியதும் சாதியநிலைக்கு எதிரான அம்சங்கள். ஆக இதிலிருந்து விலகும் மக்களை அந்த கட்டமைப்பில் வைத்து படிநிலையை காத்தால் ஒழிய இந்திய சமூக அமைப்பின் ஏதேச்சதிகாரத்தன்மையை காக்க முடியும்.அரசும் அதன் தன்மையோடு இருக்கும்.இதற்கு சாதிய அமைப்புகள் தேவைப்படுகின்றன.எப்போதும் இல்லாத அளவிற்கு சாதிய அமைப்புகள் சலுகைகளை கோரிக்கையாக வைக்காமல் சாதியஅமைப்பை காக்க வேண்டியதை முன்னிலைப் படுத்துகின்றன.

          இன்றைய காதலும் அதன்படி நிகழ்த்தப்படும் திருமணங்களும் சமூக உணர்வோடு நிகழ்வதில்லை."மனிதகுலத்தின் வாழ்தலே நுகர்தல்தான் என்பதாக கட்டமைக்கப்பட்டதால் நுகர்வின் பன்மடிப்புகள் கொண்ட உலகு படைக்கப்படுகிறது. புறயதார்த்தம் என்று சொல்லப்படுகிற இன்றைய உலகு முதலாளித்துவ சந்தைக்கான ஒன்றாக படைத்து காட்டப்படுகிறது. வாழ்க்கையும் சந்தையும் ஒன்றாகிவிட்ட இந்த சூழலில், மனித உடலின் அடிப்படை உரிமையான வாழ்வும், சாவும் முதலாளித்துவத்தின் முதலீடுகளாக மாற்றப்படுகின்றன. பயன்பாடு என்கிற கருத்தாக்கத்தின் வழியாக, மனித உடல்களின் வாழ்க்கை என்பது பயனுள்ளது-பயனற்றது என்கிற இருமைக்குள் சிக்கவைக்கப்பட்டுள்ளது. பயனற்றது சாவதை ஏற்பதும், பயனுள்ளதை வளர்ப்பதும் என்பதாக மாறியதால், முதலாளித்துவம் முன்வைத்துள்ள லாப-வேட்கைகொண்ட வாழ்வின் பயன்பாட்டிற்கானதாக உடல்கள் மாறின. இவ்வாறு, வாழ்வதற்கான உயிர்-ஆற்றலை, சாவதற்கான உடல்-ஆற்றலாக முதலாளித்துவம் முதலீடு செய்வதே அணுஉலை தொழில்நுட்பத்தின் அடிப்படையாக உள்ளது. அதாவது, மனித உடல்களை சாவிற்காக முதலீடு செய்வதே அரசின் இறையாண்மையாக உள்ளது. ”மரண-உலகை“ (death-worlds) மற்றும் “”வாழும்-சவங்களை” (living-deads) உற்பத்தி செய்வதற்காக பேரழிவு ஆயதங்களை உருவாக்கி தனது இறையாண்மையை நிலைநிறுத்துவதே இன்றைய அரசுகளின் செயல்பாடாக உள்ளது[i]. வாழ்விற்கான ஆற்றலை வணிகமயமாக்கிவிட்டு, சாவிற்கான ஆற்றலை கையகப்படுத்திவிட்டன அரசும் அதன் பின்னுள்ள முதலாளிய சக்திகளும். இச்சூழலில் வாழும் மனிதஉடல்கள் ஒவ்வொன்றும் தன்னை ஒரு வணிகச்சின்னமாக (பிராண்டாக)[ii] முன்வைத்து நுகர்வின் வணிகப்போட்டியில் ஈடுபாடு கொள்ள வைக்கப்படுகிறது."ஜமாலன் கூற்றுப்படி வாழ்தலே நுகர்தல்தான் என்பதாக கட்டமைக்கப்பட்டு விட்டதால் நூகர்தலில் தீவிரத்தன்மையாக காதலும், திருமணங்களும் ஆகிவிட்டது.அதற்கு தகவல் தொடர்புகருவிகள், ஊடாகங்களும் நகரங்களின் வளர்ச்சி, கல்வி நிறுவனங்களின் வணிகத்தன்மை,போக்குவரத்து வாகன வளர்ச்சி பயன்படுகின்றன. நூகர்தலின் தீவிரத்தன்மை நீர்த்தப்பொழுது காதலும்,திருமணமும் தோல்வியில் முடிகிறது.இதனால் காதல் சாதி மறுப்பு சுதந்திரத் திருமணங்கள் எதிர்க்கப்படும் நிலைத் தோன்றியுள்ளது.

              சுதந்திர சீனாவில் தலைவர் மாவோ நிறைவேற்றிய ஆணையை இங்கு வாசிப்பது அவசியமாகிறது.அது 1931-ம் ஆண்டு ஜனவரி 28-ம் நாள் வெளியிடப்பட்டது. அது கூறுகிறது "நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தின் கீழ் திருமணம் எண்பது காட்டுமிராண்டித்தனமான மனிதத்தன்மையற்ற ஏற்பாட அமைந்துள்ளது.அடக்குமுறையையும்,துன்பத்தையும் ஆண்களைவிடப் பெண்கள் தான் மிக அதிகமாக எதிர்கொள்கின்றனர்.

             தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் புரட்சியில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து எடுத்து வைக்கப்பட்ட முதலடியான ஆண்கள் மற்றும் பெண்களின் பொருளாதார விடுதலையானது திருமண உறவுகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவற்றை சுதந்திரமானதாகவும் மாற்றுகிறது.இப்போது சோவியத் மாவட்டகளில் திருமணங்கள் சுதந்திரமான முறையில் நடைபெறுகின்றன.சுதந்திரமான தேர்வு தான் ஒவ்வொரு திருமணத்திற்கும் கட்டாயமான அடிப்படை கோட்பாடாக இருக்க வேண்டும்.தங்கள் பிள்ளைகளுக்காக திருமண ஏற்பாடு செய்வதற்கான, அவர்களின் விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்துவற்கான பெற்றோரின் அதிகாரம் உள்ளிட்ட ஒட்டுமொத்த நிலபிரபுவத்த முறையும் திருமண ஒப்பந்தங்களில் நடைபெறும் அனைத்து பொருளாதார ரீதியான கொடுக்கல் வாங்கல்களும் இத்தருணத்தில் இருந்து சட்டப்பூர்வமாக ஒழித்துக் கட்டப்படுகிறது..................மணவிலக்குத் தொடர்பானப் பிரச்சனைகளில் பெண்களைப் பாதுகாப்பதும், மணவிலக்குத் தொடர்பான கடமை மற்றும் பொறுப்புகளின் மிகப்பெரிய பகுதிக்கு ஆண்களைப் பொறுப்பாக்க வேண்டியதும் அவசியமாகிறது......  '

          உயர்சாதி ஆதிக்கமுறையை எதிர்த்தும் பரம்பரைத் தொழிற்பிரிவினை, அகமணமுறை, படிநிலை முறை, தீண்டாமை ஆகியவற்றிர்க்கு எதிராக பார்பனிய சைவவேளாள உயர்சாதி ஆதிக்கமுறையை எதிர்த்து ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு ஆதரவாக சீர்திருத்தங்களை கோருவது ஒரு முதலாளித்துவ சனநாயக தன்மை கொண்டது. அது அவசியமாகிறது.
  
        1.சாதிய மோதல்களில் ஈடுபடுவோர் மற்றும் வழக்குகளில் உள்ளவர்கள் அரசின் மூலம் கிடைக்கும் சாதிய அடிப்படையிலான சலுகைகளை ( இட ஒதுக்கிடு உட்பட ) உடன் ரத்து செய்ய வேண்டும்.

    2..சாதிய மோதல் உட்பட்ட பகுதியின் அரசு நிறுவனத்தின் அங்கமான வருவாய், நீதித்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள், அலுவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு குற்றவியல் விசாரணைக்கு             உட்படுத்தப்படவேண்டும்.

     3.சாதிய மோதல் நிகழத்திக்கொள்ளும் சாதியமைப்பு  தலைவர்கள் மீது குற்றவியல் வழக்குகள் தொடரப்பட்டு நீதிமன்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். அதுவும் வேறு மாநிலத்தில் நடத்தல் வேண்டும்.

     4.சாதிய மோதல் நடக்கும் பகுதியில் அதில் ஈடுபடும் மக்களின் ஒட்டுகள் செல்லாதவைகள் என அறிவிக்க வேண்டும்.

    5.காதல் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டு குறுகியகாலத்திலேயே மணவிலக்கு கோரும் நிலையில் அதற்கு ஆண்களை பொறுப்பாக்கி இழப்பீடு வழங்க வேண்டும்.

      6.காதல் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டோருக்கு அரசு பாதுகாப்பளித்து,மாதம் தோருமான ஊக்கத்தோகை வழங்கி அவர்களின் குழந்தைகளுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் கல்வி வேலை வாய்ப்புகளில் தனி இட ஓதுக்கிடும் தரப்பட வேண்டும்.

    7.சாதிய இருக்கமுள்ள பகுதிகளில் கலப்பு குடியிருப்புகளை நிறுவ வேண்டும்.அதற்கு முனைப்பு காட்டும் ஊராட்சிகளுக்கு சிறப்பு தகுதியளித்து அரசின் நலத்திட்டங்களை அறிவித்து விருதும் வழங்க வேண்டும்.

    இப்படியான சனநாயகக் கோரிக்கைகளை முன்னிலை படுத்துவது அவசியமானது என்பதற்கான உரையாடலைத் தொடருவோம்.

Monday, July 2, 2012

Poombukar eroded ancient city -கரைத் திண்ணும் அலைகளும் தாகம் தீராக் கடலும்.


மனித வேட்கையால் கரை  திண்ணும்  அலைகளும், தாகம் தீரா கடலும்       - பொறியாளர்  இரா. கோமகன், எம்.இ.,

தமிழகக் கடற்புற நிகழ்வுகளை பற்றி அறிய இந்த நூற்றாண்டில் காட்சிப் புலனகாகிய இரு பெரும்  நிகழ்வுகளைப் பற்றி அறிதல் அவசியமாகிறது.  

மிழகம் தன் பெருநிலப் பகுதியை கடந்த சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு 1964ல் இந்த நிகழ்வு  கடலைப் பற்றிய பொதுபுத்தியில் அச்சத்தை மூட்டியது. 1964 டிசம்பர் 22ம் நாள் இரவு 11.55க்கு  தென்கோடியாகிய தமிழ் மண்ணில் அக் கோரத்தாண்டவம் நிகழ்ந்தேரியது. 110 பயணிகள்  5 ஊழியர்களுடன் புறப்பட்ட புகை வண்டியை 280 கி.மீ வேகத்தில் வீசிய சூறாவளியும், 8மீட்டர் உயரம் எழும்பிய கடலலைகளும் விழுங்கி தின்று தீர்த்தன. 653 என்ற எண் கொண்ட பாம்பன், தனுஷ்கோடி பயணிகள் புகைவண்டி தான் அந்த பெரும் சோகத்தை எதிர்கொண்டது. 1800 மக்கள் மாண்டனர். பள்ளிக் கூடங்கள், அஞ்சல் அலுவலகம், கடவுச் சீட்டு அலுவலகம், அரசுத்துறை  அலுவலகங்கள், தேவலாயங்கள் பாம்பன் பாலம், அனைத்தும் 10 கி.மீ  வரை உட்புகுந்த  கடலால்  அழிக்கப்பட்டு, அன்றைய இன்று இரவு தனுஷ்கோடிக்கு விடியாத இரவாக  போனது.  தனுஷ்கோடி மனித சஞ்சாரமற்ற பேய் பூமியாக இடிந்து மண்மேடாகிவிட்ட  கட்டங்களுடன்  கட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
  
2004 டிசம்பர்26ம் நாள் உலகில் இயற்கை பேரழிவாகப் பதிவு பெற்ற வரலாற்றில் மிகப்பெரும்  நிகழ்வான ‘சுனாமி’ எனப்படும் ஆழிப் பேரலையால் நிலம் அழிந்த நாள். இந்தோனேஷியா - சுமத்திர தீவுகளுக்கிடையில் கடல் கிடை மட்டத்தில் 9.1 ஹெக்டர் அளவில் நிகழ்ந்த நில அதிர்வி  98 அடி உயரமுள்ள பேரலைகள் எழும்பி நிலத்தை விழுங்கின. அன்றைய நள்ளிரவு தாண்டி நிகழ்ந்த ஆழிப்பேரலை கோரத்தாண்டவம் உலகில் நிகழ்ந்து மூன்றாவது பெரிய நிகழ்வாக பதிவானது. அது 3,10,000 மக்களை பலிகொண்டது. இந்தியாவின் கிழக்கு கடற்கரையை தாக்கி மிகப்பெரும் பேரழிவை ஏற்படுத்தியது.  6,91,000 மக்கள் பாதிக்கப்பட்டனர். 7,793  பேர் இறந்து  போயினர். தமிழகத்தில் நாகை கடற்கரை மேலதிகமாக பாதிக்கப்பட்டு 5,525 பேர் மாண்டனர்.   கன்னியாக்குமரியில் 808பேர், கடலூரில் 599பேர், சென்னையில் 206 பேர் காஞ்சிபுரத்தில் 124, புதுக்கோட்டை 15, ராமநாதபுரம் 6, திருநெல்வேலி 4, தூத்துக்குடி3, திருவள்ளூர் 28,  தஞ்சை 22, திருவாரூர் 10, விழுப்புரம் 47 ஆக எல்லா கடற்கரை மாவட்டங்களும் இப்பேரிடரை  எதிர்கொண்டன. இப்பேரிடர் ஒரு நாள் முன்னதாக நிகழ்ந்திருக்குமானால், வேளாங்கன்னி  மேரிமாதாக் கோவில் கிருஸ்மஸ் பண்டிகைக் கூடிய ஒரு லட்சத்திற்கு மேலானவர்  இறந்து போயிருக்கக்கூடும்.  

மண்ணுயிர்களுக்கு வாழ்வாதாரமான இவ்வுலகம் மூன்று பங்கு கடலாகவும், ஒரு பங்கு  நிலமாகவும் உள்ளது. வங்காள விரிகுடா, அரபிக்கடல் மற்றும் இந்து மாக்கடல் என ஆழிசூழ் நிலமான தமிழகம் 950 கி.மீ கடற்கரையை பெற்றுள்ளது. வங்காள விரிகுடாவில் 46 ஆறுகளின் கழிமுகத் துவாரங்கள் உள்ளன. இந்நிலம் வடகிழக்கு மற்றும் தென்மேற்குப் பருவகாற்றால் ஆளப்படுகிறது. தமிழக கடற்கரை வாழ் மக்கள் கூட்டம் சராசரியாக 417 பேர் ஒரு சதுர  கி.மீ என்ற  விகிதத்தில் உள்ளது. இந்தியாவில் 25 சதவிகித ம க்கள் கடற்கரையை ஒட்டி வாழ்கின்றனர்.   இந்தியாவின் கிழக்கு கடற்கரையை சராசரியாக ஆண்டுக்கு எட்டு புயல்கள்  63 கி.மீ  வேகத்தில் தாக்குகின்றன.  இந்த எட்டு புயல்களில் இரண்டு 117 கி.மீவேகம்  உள்ளதாக  தீவிரமடைகின்றன. 

‘முந்நீர் நாப்பண் திமிற்சுடர் போல’       (புறநானூறு :60) 

‘முந்நீரினுட்புக்கு மூவாக் கடம் பெறிந்தான் 
மன்னர் கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன்’    (சிலம்பு, ஆய்ச்சியர் ) 

என்று இலக்கியங்கள் கூறும் ‘முந்நீர்’ கடலைக் குறிக்கும். முந்நீர் முச்செய்கையுடைய நீர் எனும் பொருளில். மண்ணைப் படைத்தலும், மண்ணையழித்தலும், மண்ணைக்  காத்தாலும் ஆகிய முச்செயல்களால்  கடல்நீர்  முந்நீர் எனப்பட்டது.  

தமிழகம் காலந்தோறும் கடல்கோள்களால் நிகழ்த்தப்படும் அழிவிற்கு இலக்காகி வருகின்றது.   தமிழின் இரண்டு தமிழ் சங்கங்கள் தென்மதுரை மற்றும் கபடாபுரத்தின் கண் அமைந்திருந்தன என்பதற்கு இலக்கிய சான்றுகள் உள்ளன. இறையனார் களவியலுரையில் இதன் வரலாறு  விவரிக்கப்படுகின்றது.  

முதற் தமிழ்ச்சங்க காலத்தில் தமிழ்நாட்டில் தென்பகுதியில் ‘பஃறுளி’ யும் ‘குமரி’ ஆறும் ஓடின. அவ்விரு பேராறுகளுக்கிடையில் எழுநூற்றுக் காவதப் பரப்புடைய நாற்பத்தொன்பது  நாடுகளும் குமாரி கொல்லம் முதலிய பன்மலை நாடும் அமைந்திருந்தன. தலைச்சங்க காலத்தின் இறுதியில் பன்மலையடுக்கமாகிய குமரி நாட்டைக்  கடல்மீதூர்ந்து அழித்துவிட்டது.  

‘‘பஃறுளியாற்றுடன்  பன்மலையடுக்கத்துக் 
குமரிக்கோடும்   கொடுங்கடல் கொள்ள’’ (சிலம்பு - காடுகாண்காதை) 

என்ற தொடரில் இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார். தமிழ் மண்ணின் தென்னெல்லையாகத் திகழ்ந்த குமரியாறும் தொல்காப்பியனார் வாழ்ந்த இடைச்சங்கமும்  கடல்கோளால்  அழிந்தெனத் கூறப்படுகின்றது.  

‘‘அவர்களைச் சங்கம் இரீஇயனார் கடல் கொள்ளப்படும் போந்திருந்த முடத்திருமாறன் முதலாக உக்கிரப்பெருவதியீறாக  நாற்பத் தொன்பதின்மரென்ப’’  என கடைச்சங்க வரலாற்றில்  இறையனார் களவியலுரை உரைக்கின்றது.  

வரலாற்றை அறிவது வாழ்வை அறிவதாகும். வாழ்வை அறிவது வாழ வேண்டிய வழியை  அறிவதாகும். இதில் சுயமோகம் இன்றி வரலாற்றை  ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகின்றது.
    
தமிழக கடற்கரை பல அழகிய சிறப்புடைய துறைமுகங்களைப் பெற்றிருந்ததற்கு பல சான்றுகள் உள்ளன. காவிரிப் பூம்பட்டிணம், மரக்காணம், அரிக்கமேடு, வசவசமுத்திரம்,   காரைக்காடு, அழகன் குளம், நாகப்பட்டிணம், பெரியப்பட்டிணம், முசிறி, கொற்கை ஆகியவை அவை. இவற்றின் மூலம் பன்னாட்டு வாணிகம் சிறப்பாக நடைபெற்றன. பன்னாட்டவரின்  வருகையால் சிறந்து விளங்கிய இத்துறை முகங்கள் யாவும்  இன்று தன்னிலை இழந்து தாழ்ந்து  விட்டன.  

 தமிழகத்தின் கடந்த இரண்டாயிர வருடம் அனுபவ வாழ்வில் கடன் சார்ந்த அனுபவங்களின் பதிவுகள் மிக அரிதாகவே தமிழில் இடம் பெற்றுள்ளன. அறவே இல்லை என்று சொன்னால் கூட அதில் மிகப்பெரிய தவறேதும் நிகழ்ந்து விடப்போவதில்லை. சங்க இலக்கிய நெய்தல் திணைப்பாடல்களில் எல்லாம் கவிஞன் கரையோரமாக நடந்து கொண்டிருக்கிறான். அவன் முன்னால் விரிந்த நீர் பரப்பு வியப்பூட்டும் நீர்ப்பரப்பு அவ்வளவே தொல்காப்பியம் சுட்டுவது போல் இது பெருமணல் உலகம், கடலும் கடலைச் சார்ந்த உலகம் அல்ல. கடலே கலங்கும் படியாக சுறாமீனை எறிந்து வேட்டையாடும் பரதவனைக் குறித்த சங்க இலக்கியப் பரப்பில் கேட்க முடியும். ஆனால் சுறாமீன் வேட்டையை கலக்கும் கடலை அனுபவமாகத் தமிழ் வாசக மனதில் பதிய வைக்க சங்க கவிஞர் எவரும் முற்படவில்லை என்ற எம். வேதசகபயகுமாரின் கூற்றில் முழு உண்மையுண்டு. ஆனால் ஒரு சில நெய்தல் திணை சங்கப்பாடல்கள் கடலும் கடல் சார்ந்த வாழ்வையும் முன்வைக்கின்றன. 

வயச்சுறா எறிந்த புண் தணிந்து, எந்தையும் 
நில் நிறப் பெருங்கடல் புக்கனன் யாவும் 
உப்பை மாறி வெண்ணெல் தரீஇய
உப்பு வினை கழனிச் சென்றனள்    (குறுந்தொகை 269) 
என்று,    

கல்லாடனாரும், நற்றினைப் பாடலில் 
பெருநீர் விளையும் எம் சிறு  நல் வாழ்கை 
நும்மொரு புரைவதோ அன்றே, 
எம்மனோரில் செம்மாலும் உடைத்தே   (நற்றினை 45) 

இது நெய்தல் நிலவாழ்வை நம்முன் காட்சி புலனாக்கும் ஒரு முயற்சி. நீல் நிறப்பெருங்கடல் கலங்க உட்புகுந்து கடலாண்ட ஒரு சமூகத்தில் அதைப்பற்றிய பதிவுகள் குறைவாக உள்ளது  வருந்த தக்கதே. ஆனால் அதைப்பற்றிய அறிவை ஆழமாக பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 
கடல் சார்ந்த வாழ்கையானது மற்றவர்களை விட காற்றினைச் சார்ந்தே இயங்குவது. அது ஏற்படுத்தும் விளைவு. அது வீசும் திசை, வீசுங்காலம் அதற்கு தக்கவாறு மரக்கலத்தை இயக்க வேண்டியது கடலோடிகளுக்கு தேவையாகிறது. காற்று என்பது பொதுவான ஒன்றாக இல்லாமல், வீசும் திசை மற்றம் தன்மையால் பல்வகையாக மாறுபடுகின்றது. தமிழகக் கடலோடிகள் காற்றினைப்பற்றி தெளிவாக உணர்ந்திருந்தனர். காற்தை எட்டுவகையாக பிரித்து பெயரிட்டு கடல் ஆண்டனர். வீசும் திசையையும் காலத்தையும் கொண்டு கச்சாங்காத்து, கச்சாம் பொறைக்காத்து, குமிஞ்சாங் காத்து, குன்னு வாடகைக்காத்து, கொண்டக்காத்து, மேலாக்காத்து, நெடுங்காத்து, வடமேலாகாத்து இது கிழக்கு கடற்கரை மக்கள் காற்றை வகைப்படுத்தும் முறை. குமரி மாவட்ட மக்கள் காற்றை பதினாறு வகையாகவும் இராமநாதபுரம் மாவட்ட மக்கள் எட்டாகவும் மன்னார் வளைகுடா பகுதியினர் நான்காகவும், வகைப்படுத்துகின்றனர். காற்றின் மாறுபாடு கடல் நீரோட்டத்தில் வேறுபாட்டை மேற்கொள்ள வைக்கின்றன. தமிழக கடற்கரையில் கடல் நீரோட்டம் (டீஉநயn னுசகைவ) கிழக்கு கடற்கரையில் இருப்பது போன்று தென் கடற்கரையி  இருப்பதில்லை. இந்த கடல் நீரோட்டம் தான் கடற்கரைய மாற்றியமைக்கின்றன. கடல் செல்வத்தை நெய்தல் மக்களுக்கு பங்கிடுகின்றன. இதைப்பற்றிய முழுமையான அறிவை நம் நெய்தல் நிலமக்கள் அறிந்திருந்தனர். வாணிவாடு, சோனிவாடு, அரனிவாடு, கரைகட்டுவாடு  என்று நீரோட்டத்தை வாடு என்ற சொல் கொண்டு அது நிகழும் காலத்தை அடிப்படையாகக் கொண்டு வாணி, வன்னி, சோனி, அரனி, கரைகட்டி என்று வகைப்பிரித்தனர். வடகிழக்கு பருவக்காற்றின் காலத்தில் வடக்கிலிருந்த தெற்காகவும், தென் மேற்கு பருவக்காற்றின் தெற்கிலிருந்து வடக்காகவும்  கடல் நீரோட்டம் (டீஉநயn ஊரசசநவே) கிழக்கு கடற்கரையில் நிலவுகின்றது. இந்த நீரோட்டத்திற்கு இடையூறு நேரும் போது அது கரை அரிப்பதும் வேறு இடத்தில் சேர்ப்பதுமாக கரையாளுகின்றது. 

தமிழக கடற்கரை மக்கள் நீரின் தன்மையை வைத்து கடல் செல்வம் ஆளும் திறன் பெற்றிருக்கின்றனர். கடல் நீரை தேத்து என்ற வார்த்தையால பழகுகின்றனர். இருண்ட தேத்து, பூக்கலந்தேத்து, ஒடுக்கு தேத்து, தெளிந்த தேத்து என நால்வகைப்படுத்துகின்றனர். கால நிலைக்கு ஏற்ப கடல் நீரோட்டமும் காற்றும் மாறுபடுவதால் இவற்றின் ஆளுகைக்குட்பட்ட நீரும் மண்ணும் இணையும் போது நிறங்கலும் மாறுபாடு கொள்வதை உணரமுடியும். 

கடல் ஏத்தம், கடல் வத்தல், என்று ழபைh கூனைந மற்றும் டுடிற வனைந யும் குறிப்பிடுகின்றனர். கடல் ஏத்தம் என்பது கடல் பெருகி கரையை மீதூர்ந்திருக்கும் கடல் வத்தல் என்பது கடல் உள்வாங்குதலையும் குறிக்கும். கடற்கரை யாவும் கலங்கரை அல்ல, கலங்கரைக்கு சில இயற்கை ஏற்பாடுகள் தேவை.  கடல் கிடைமட்டம், அலைகளின் கரையாளுகை, முகத்துவாரத்தின் நிலமட்டம், கடல் ஏற்றம், இறக்கம் ஆகியவற்றிற்கு ஏற்ப கலங்கரை ஓட்டத்தினால் கடல் நீரோட்டத்திற்கு இடையூறு தோன்றி கடல்கரை அரிப்பு ஏற்பட வாய்ப்பிருந்தது. இதை உணர்ந்து ஏங்கெல்லாம் கரைஅரிப்புள்ளாகின்றதே அங்கெல்லாம் அக்கரையொட்டி பிறை வடிவமாக ஆற்றின் கழிமுகத்துவாரங்களை அமைத்து கரையாண்டனர். இம்முகத்துவாரங்களின் வழி கடல் ஏற்றத்தின் போது கடலிளிருந்து கலங்களை கரையேற்றவும், கடல் வற்றும் போது கடலுள் செலுத்தும்படியான துறைமுகங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இது தமிழ் மக்களின் கலங்கரை அமைக்கப்பட்டிருந்தன. இது தமிழ் மக்களின் கலங்கரை யாளுகையை பற்றிய அறிவை புரிந்து கொள்ள உதவுகிறது. 

காற்றின் எதிர்திசையில் கலங்களை செலுத்தும் மாண்பினைக் கற்றிருந்தனர். இன்றளவும் கன்னியாக்குமாரி மீனவமக்கள் காற்றின் எதிர் திசையில் கலங்களை வேகமாக செலுத்தும் கலையை கைவரப்பெற்றவராக  நிகழ்கின்றன. அது அலைகள் மற்றும் நீரோட்டம் பற்றிய அறிவு முழுமையாக இல்லாவிட்டால் சாத்தியமே இல்லை. 

அலையின் தன்மையைக் கொண்டு ஆண் அலை பெண் அலை என்று பிரிக்கின்றனர். கடல் அலைகளின் ஓட்டம் தடைபட்டு அவை தன்மை மாறும் இடத்தை மடங்கல் (றுயஎந க்ஷசநயமiபே ஷ்டிநே) என்று அறிவித்தனர். அலைகள் அவ்விடத்தில் தான் மடங்கிச் சுருண்டு வருவது யாவராலும் காணக்கூடியதே. இரு அலைகளுக்கு இடையே உள்ள பகுதி ‘வாங்கியர்’ என்ற சொல்லில் புழங்குவதின் மூலம் இப்பகுதி கலங்களை வாங்கி செலுத்தும் பௌதீக சக்தியை கொடுக்கின்றது. உலகிலேயே கடல் நீரோட்டம் அறிந்து அதன் வழி கலம் செலுத்தும் கலையை தமிழர்கள் கற்றிருந்தனர். இதற்கு கடல் ஆமைகளை தொடர்ந்து கலம் செலுத்தி கடல் ஆண்டவர்கள். இதனால் தான் சோழர்களின் கப்பற்படைக்கு வங்காளவிரிகுடா ஒரு பெரும் ஏரியாக தோன்றியது என  நீலகண்ட சாஸ்திரிகள் கூறுவார். சங்க இலக்கியம் கூறும்  மரக்கலம், நாவாய், வங்கம், மதலை, கப்பல், பஃறி அம்பி, திமில் போன்ற கலங்கள் தமிழர்களால் பயன்படுத்தப்பட்டன. 

நளியிடு முன்னீர் நாவாயோட்டி 
வளிதொரி லாண்டவுரவோன் மருக 
களயியல் யானைக்கரிகால் வளவ   (புறநானூறு 66) 

திமில் வகை கலங்களை கடல் நீரோட்டத்திசையிலே 
செலுத்தினர் என்பது கீழ்காணும் இலக்கிய வரிகள் சான்று வரைக்கும் 
செல்யாற்றுத் தீம்புனலிற் செல்மரம்போல். (பரிபாடல் 6) 

நீர்வழிப் படூஉம் புனை போல்   (புறநானூறு 192)

கடலின் பௌதீக மாற்றங்களையும் அது நிகழும் பருவங்களையும் அறிந்திருந்தினார். அதன்படி  கலங்களை செலுத்துவதிலும் வல்லவர்களாக இருந்தனர் என்பதற்கு நாவாய் சாத்திரம்’’ என்ற ஓலை சுவடிப் பதிவுகள் சான்று. இன்னும் மீன் மற்றும் கடலுயிர் இனங்கள் பற்றி விரிவான அறிவு நெய்தல் மக்களிடம் உண்டு அதுபற்றிய பதிவுகள் இல்லாமலிருக்கின்றது. 
நெடிய அனுபவமும் கொணட இம்மண்ணின் மக்களது செல்வமும் அதற்கு ஆதாரமான கடற்கரையும் அழிக்கப்படுவது வேதனைக்குரியது. 

உலகில் அபூர்மாக அமையப்பெற்ற கடற்பரப்பில் ஒன்று மன்னார் வளைகுடா 10,500 சதுர கி.மீ .பரந்து விரிந்துள்ள இந்த பரப்பு 3600 அரிய கடல் உயிரினங்களுக்கு புகலிடமாக உள்ளது.  குளிர்காலத்தில் கூட 250ஊ வெப்பமும் கோடையில் மெல்ல மெல்ல உயர்ந்து 320ஊ வெப்பம் அடையும் கடல் உயிர்ச் சூழலுக்கு மிகவும் உகந்ததாக உள்ளது. இதையுணர்ந்து இந்திய நடுவணரசும் தமிழக அரசும் இப்பரப்பினை தேசிய கடற் பூங்காவாக அறிவித்துள்ளது. ஆனால் இதன் உயிர் சூழலை அச்சுறுத்தும் அழிவாற்றல் சக்திகள் நாகை கடற்கரையில் அனல் மின் நிலையமாக அமையப் போகின்றன. இந்த அனல் மின் நிலையங்கள் மூலம் வெளியேற்றப்படும்  பௌதீக வேதி வினைகளுக்கு உட்பட்ட நீர் கடல் உயிர் சூழலை அழிப்பது உறுதி. 
தமிழகக் கடற்கரை இய ற் கை  சமன்பாட்டை இழந்து வருகின்றது. இதனால் பல்வேறு  இடங்களில் கடற்கரை அரிப்பு தீவிரமாகியுள்ளது. 13 மாவட்டங்களின் கடற்கரை பல்வேறு வகையில் பாதிப்புள்ளாகின்றது. 


வ. எண். மாவட்டம் மாசு வகைகள்
1. திருவள்ளூர் அனல்மின்நிலையம், தொழிற்சாலை கழிவுகள், ரசாயன கழிவுகள், கழிவுநீர். 
2. சென்னை துறைமுகம், தொழிற்சாலைகள், ரசாயனக் கழிவு, சாக்கடை நீர்,
3. காஞ்சிபுரம் அனல்மின்நிலையம், சாக்கடை, தொழிற்சாலை கழிவு நீர், ரசாயனக் கழிவுநீர், தோல் பதநீடும் கழிவுநீர்,   சாயத்தொழில், கழிவு, சுற்றுலா  
4. விழுப்புரம் சாக்கடை, கழிவு, தொழிற்சாலை கழிவு ரசாயனக் கழிவு, இறால் வளர்ப்பு
5. கடலூர்                   ரசாயனக் கழிவு,  தொழிற்சாலை கழிவு, மீன் வளர்ப்பு
6. நாகை                  அனல்மின் நிலையம், இறால் வளர்ப்பு, சுற்றுலா
7. திருவாரூர் இறால் வளர்ப்பு,
8. தஞ்சாவூர்   சாக்கடை கழிவுகள்
9. புதுக்கோட்டை சாக்கடை கழிவு, நெய்ணெய் மீன், தொழிற்சாலை கழிவு, இறால் வளர்ப்பு
10.   ராமநாதபுரம் மீன்பிடித்துறைமுகம், இறால் வளர்ப்பு, சாக்கடை 
11. தூத்துக்குடி அனல்மின் நிலையம் தொழிற்சாலை, ராசயனகழிவு, உப்புக் கழிவு, ஈசல் வளர்ப்பு, சாக்கடை கழிவு
12. திருநெல்வேலி தொழிற்சாலை, அணுமின் நிலைய கழிவு, சாக்கடை கழிவு
13. கன்னியாக்குமாரி சாக்கடை கழிவு,  மீன் கழிவு, சுற்றுலாக் கழிவு

மேலே குறிப்பிட்ட மாசுகளால் நெய்தல் நிலமக்களின் வாழ்வாதரமான கடல் செல்வமும்,  உயிர் சூழலும் மாற்றத்திற்குள்ளாகி, அழிக்கப்பட்டு வருகின்றது. தமிழகக் க டற்கரைப் பகுதியில்  5500க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. அதில் 2500 தொழிற்சாலைகள் கடற்கரையிலேயே அமைந்துள்ளன. சென்னைக் கடற்கரையில் மட்டுமே 1500 தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. 

தமிழக கடற்கரை சுத்திகரிக்கப்படாத கழிவு நீர், தொழிற் சாலைகளிலிருந்து   வெளியேற்றப்படும் ரசாயனக் கலவையுடனான கழிவுநீர், துறைமுகத்தில் நடைபெறும் தூர்வாரும் பணிகள், கப்பல் கழிவுப் பொருட்கள், கழிவு எண்ணெய் கடலில் கலத்தல்,  மீன் கழிவுகள், அழிந்த பொருட்கள் கடலில் கொட்டுதல் போன்றவற்றால் கடல் மாசுபடுகின்றது.
சென்னை நகரிலிருந்து மட்டும் 17,50,000 ஒவ்வொரு நாளும் லிட்டர் கழிவு நீர் சுத்திகரிப்படாமல் கடலில் கலக்கின்றது. சென்னை, பாண்டிச்சேரி, கடலூர், நாகப்பட்டிணம், தூத்துக்குடி போன்ற பெருநகரங்கள் அல்லாமல்  500க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களின் கழிவு நீரும்  கடலில் கலக்கின்றன. பல்வேறு தொழிலின் வேதிப் பொருட்களால்  கடல் நீர் மாசுபடுகின்றது.  

வ. எண் மாசுபடுத்தும் நிறுவனச் செயல்                                         மாசுபடுத்தும் வேதிப் பொருட்கள்
1. இராசயனத் தொழிற்சாலை                                                                         பாதரசம்  (ஆநசஉரசல)
2. தொழிற்சாலையின்  வெப்ப நீர் மற்றும்  துருப்பிடித்த குழாய்கள் செம்பு (ஊடியீயீநச)
3. வெளிமண்டல தூசி மற்றும்  மழைநீர்                                                      காரியியம் (டநயன)
4. உலோகத் தொழில்                                                                               (ஷ்inஉ)       (ஊயனஅரைஅ) (ஊhசடிஅரைஅ)
5. நகராட்சி  கழிவுநீர் செம்பு                                                                              (ஊடியீயீநச)      (ஊயனஅரைஅ)
6. நிலக்கரியை  எரித்தல்                                                                       செம்பு (ஊடியீயீநச)  காரியியம் (டநயன) (ணinஉ)
7. எண்ணெய் எரிபொருள்  எரித்தல்                                                     (சூiஉமநட)
8. தூர்வாருதல், துறைமுக கழிவு                                                                       (ணinஉ) காரியியம் (டநயன) செம்பு (ஊடியீயீநச)  
9. பெயிண்ட் வகைகள்                                                                       செம்பு (ஊடியீயீநச) பாதரசம் (ஆநசஉரசல)
    
கடற்கரை சந்திக்கும் மிகப்பெரும் ஆபத்து அனல்மின் நிலையங்களால் தான். அனல்மின்  நிலையங்கள் வெளியேற்றும் ஆற்றுப்படுத்தும் நீர் மற்றும் அதிலுள்ள குளோரினும் கடல் உயிர்ச் சூழலை அழிக்கின்றன. அதோ ஆற்றுப்படுத்தும் நீரின் வெவ்வேறு வகையான வெப்ப நிலை கொண்ட நீரும் அதை வெளியேற்ற அமைக்கப்பட்ட குழாய்களும் கடற்கரை நீரோட்டத்தை சிதைக்கின்றன. இது கடற்கரை அரிப்பை தூண்டுகின்றன.  
ஆற்றுப்படுத்தும் நீர் (உடிடிடயவே றயவநச னளைஉhயசபந) கடலில் கலக்கும் போது 80ஊ  முதல் 100ஊ வரை வெப்பமாற்றம் கடல் நீரில் ஏற்படுகின்றது. இதனால் 370ஊ குறைவில்லாமல் கடல் நீர் வெப்பமடைகின்றது. இது பல உயிரினங்களுக்குள் அழிவுக்கு வழிகோலி கடல் அரிப்பை துரிதப் படுத்துகின்றது. அணு உலைகள் இந்த வகையில் கூட பேராபத்து தான். 
இயற்கையின் இடர்பாடுகளை, செயற்கையான மானுட செயல்கள் நிகழ்த்தும்  அழிவிலிருந்து கடற்கரையைக் காத்து பாதுகாப்பனதாக மாற்ற வேண்டிய சூழல் நிர்பந்தம்  இன்றைக்கு தோன்றியுள்ளது. 

ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மூலம் கடற்புற நிகழ்வை ஆய்வு செய்ய வேண்டும். (ஐவேநபசயவநன டீஉநயn ளுவரனல)கடற்புற நிகழ்வு ஆய்வு கடல் உயிரினஆய வு,  கடல் அகழ் ஆய்வு, க டல் கிடை நில ஆய்வு, கடல் மண் ஆய்வு, வெப்பநிலை மாற்ற ஆய்வு,  கடல் வழி ஆய்வு, கடல் மாசு ஆய்வு போன்று கடல் சார்ந்த ஆய்வு வெவ்வேறு  நிகழ்த்தப்படுகின்றன. இவை ஒன்றொடு ஒன்று மிகவும் தொடர்புடையவை. இன்றைய  சூழலில்  ஒருங்கிணைந்த ஆய்வும் அதன் தரவுகளின் மீது ஒருங்கிணைந்த பார்வைகளும்,   இல்லாமையால் மரபு ரீதியான செயல்பாடுகள் பற்றி எவ்வித கவனம் கொள்ளப்படாமல்   அறிவியல் பூர்வமான அணுகுமுறையிலிருந்து கடல் பேரிடர்கள் மேலாண்மை வலுவிழந்து நிற்கின்றது. 
கடல் கரை அரிப்பை தடுப்பதற்கு பல்வேறு வழிமுறைகள் தற்பொழுது பின்பற்றப்படுகின்றன. அதில் ஒன்று கருங்கற்களை (சுரbடெந அடிரனே ளுநய றயடட) கொட்டி தடுப்பு சுவர் அமைத்தல். இது அலைகளின் வீரிய சக்தியை  (நுநேசபல னளைளiயீயவந) ஆற்றுப்படுத்தும் வகை தொழில் நுட்பம் சார்ந்தது. ஆனால் இவ்வகை தடுப்புச் சுவர்கள் அலைச் சக்தியை ஆற்றுப்படுத்தாமல் அதை திசை விலகல்  (னiஎநசளகைல) செய்வதால்  தடுப்பு சுவரின் இருபுறமும் பருவம் சார்ந்து கரை அரிப்புள்ளதாகின்றது. இதான் தீர்வுக்கு பதிலாக பிரச்சனை இடமாற்றம் கொள்கிறது. இதற்கு நம்மண்ணில் மரபு ரீதியான தீர்வுகள் உண்டு. எந்த கடற்கரை அலைகளின் வீரிய  தாக்கத்திற்குள்ளாகின்றதோ அங்கே பிறைவடிவ கடல் நீர்  ஆற்றுப்படுத்தும்  வாய்க்கால் (க்ஷயஉமறயவநச உடிரசளந) அமைக்கப்பட்டு கடல் நீர் உட்புகுந்து தன் வீரிய  ஆற்றலை ஆற்றுப்படுத்திக் கொள்ளும் அமைப்பு இருக்கின்றது. இதன் கழிமுகத் துவாரங்களை  மட்டும் மூடாமல் பார்த்துக் கொண்ட ஒரு பணிமட்டுமே இயற்கை இடர் மேலாண்மை தூண்டில் முள் வளைவு (ழுசலடிநே றுயடட) இதே பிரச்சனையை கொண்டு வருகின்றன. இயற்கையோடு இயைந்த கடல் மேலாண்மை நமது மரபாக இருந்து வந்திருக்கின்றன.  

குறிப்பாக ஆமைகள் நமது கடற்பயணத்தின் வழிகாட்டி (சிவ.பாலசுப்ரமணியம்) என்று அழைக்கப்பட்டிருக்கிறது. கடல் ஆமைகள் கடல் நீரோட்டத்தினுடே அதன் வழியே நீந்திச்  செல்லும் இயல்புடையவை இதையறிந்து தமிழர்கள் கடல் நீரோட்டம் அறிந்து கலம் செலுத்திய  பண்மைப் பெற்றிருந்தனர். இந்த கடல் ஆமைகள் கருங்கள் தடுப்புச் சுவர்களில் மோதி தங்கள்  உயிரை இழக்கின்றன. ரசாயனப் பொருட்கள் படிந்த கடல் உணவை உண்டு மடிகின்றன.  இதனால் தமிழகக் கடற்கரைக்கு இனப்பெருக்கத்திற்காக வரும் ஆமைகளின் வரத்து அழிந்து வருகின்றது.சித்தாமை எனப்படும் ஆலிவ்ரெட்லி வைககள் ஆஸ்திரேலியா, நியூஸ்லாந்து பகுதியிலிருந்தும், பச்சை ஆமை எனப்படும் ‘கீரின் டர்டில்ஸ்’  ஜப்பான், பர்மா பகுதியிலிருந்தும்,   கிரிமுக்கு (அ) அலுக்கா ஆமை எனப்படும் ‘அக்ஷாபில்’ வகை ஆமைகள் கிழக்கு ஆப்பிரிக்கா பகுதியிலிரந்து தமிழ் கடற்கரை தேடி வருகின்றன. இங்கு நிலவுகின்ற சூழலுக்கு ஏற்ப இங்கோ  அல்லது ஒரியா கடற்கரைக்கு இடம் பெயர்கின்றன.கடல் ஆமைகள் கடல் ஆய்விற்கு சிறந்த தரவுகளைத் தருகின்றன. அவற்றின் வழித்தடம், அவற்றின் போக்கு, வேகம், முதலியவற்றைக் கொண்டு கடல் நீரோட்டத்தின் திசை, வேகம், பருவம் முதலியவற்றை அறிய முடியும்.   ஆமைகள் கடல் நீரோட்டத்தினோடு நீந்திதான் வேறு கடற்கரையை நோக்கி புலம் பெயர்கின்றன.  பறவைகள் கூட இவ்வகை கடல் ஆய்வுக்கு நமக்கு உதவுகின்றன. இவை மரபு ரீதியான  ஒருங்கிணைந்த கடலாய்வுக்கு உதவுபவகையாகவும் உள்ளன.  

கடந்த முப்பதாண்டுகளாக தமிழகப் பொதுப்பணித்துறையின் பூண்டியில் அமைந்துள்ள,  நீரியிய மற்றும் நீர் நிலையியல் ஆய்வுக் கழகத்தால் திரட்டப்பட்ட தரவுகளின்படி ஆய்வு செய்யும் போது நாம் சராசரியாக 60 மீட்டர் கடற்கரையை இழந்துவிட்டோம். துரிதப்படுத்தப் படுகின்றது என்பதை எனது ஆறு ஆண்டுகால ஆய்வில் உணர்கின்றேன். பொதுப்பணித்துறை மூலம் குறிப்பிட்ட இடங்களைத் தேர்வு செய்து சீரான  கால  இடைவெளியில் திரட்டப்பட்ட தரவுகள் கீழ்கண்ட முடிவுகளை அறிவிக்கின்றன.   

    

வ. எண் இடத்தின் பெயர் இடம் கடற்கரை நீளம் (மீ) கடற்கரை அகலம் (மீ) கடற்கரை அலைப் பரப்பு அலையேற்ற இறக்க விகிதாசாரம் ஆண்டுதோறுமான கடற்கரை அளவு குறிப்பு
அரிப்பு (மீ) கடல் (மீ)
1. தேவனாம்பட்டினம் 100 44’ 61"" 790 47’ 32"" 750 35 10 1.84 0.60 -
2. கடலூர் 110 40’ 99"" 790 46’ 06"" 1538 200 25 1.57 1.50 -
3. பூம்புகார் 110  8’ 08"" 790 51’ 42"" 1905 100 30 2.13 1.50 -
4. தரங்கம்பாடி   110 1’ 28"" 790 51’ 10"" 760 50 10 2.20 1.00 -
5. நாகப்பட்டினம் 110  1’ 81"" 790 51’ 10"" 4270 70 15 2.04 0.50 -
6. வேளாங்கன்னி 100 40’ 95"" 790 51’ 18"" 1549 150 20 2.91 0.70 -
7. கோடியக்கரை 100  17’ 00"" 790 53’ 00"" 966 100 15 2.16 - 6.50
8. அம்மாப்பட்டினம் 100  55’ 15"" 790 13’ 57"" 3700 25 5 2.03 - 0.20
9. நம்புதலை 90  9’ 40"" 780 38’ 54"" 1200 30 5 1.56 - 0.50
10. மண்டபம் 90 17’ 01"" 790 9’ 74"" 2165 30 5 3.15 - 0.35
11. ராமேஸ்வரம் 90 13’ 32"" 790 19’ 61"" 3295 30 8 2.02 - 0.60
12. கீழக்கரை 90 13’ 42"" 790 47’ 12"" 5140 20 5 3.08 - 0.20
13. வாலிநோக்கம் 90 9’ 40"" 790 38’ 54"" 7360 40 10 2.34 - 0.60
சென்னைமுதல் நாகைவரை உள்ள கடற்கரை சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 31/2 அடிவீதம்  அரிப்புள்ளாகின்றது. கோடியக்கரை முதல் வாலிநோக்கம் வரை சராசரியாக 11/2 வீதம்  கடற்கரையில் மணல் சேருவதுமாக உள்ளது. ஆனால் கடற்கரை முழுவதும் மாசுபட்ட  கடற்கரையாக உள்ளன.  

எதிர்வரும் தலைமுறைக்கு உலகின் மூன்று பங்கை தனதாக்கி கொண்ட கடலோடு உறவாடி அதை காத்து கடற்கரையை மேலாண்மை செய்து பாதுகாப்பாக ஒப்படைக்க வேண்டிய கடமை  நம்முடையது. அதற்குஒருங்கிணைந்த கடலாய்வு மற்றும் மேலாண்மை  தேவை. இவ்வகையான கூட்டங்கள் அதற்கு உதவும் என நம்புவோமாக. 
#Old chola harbour # Poombhuhar port, # Ancient tamil port # The eroded Poombuhar pattinam.


Thursday, April 5, 2012

கூடங்குளம் கற்க கசடற...

கூடங்குளம் கற்க கசடற...


                     பிரபஞ்ச பேரியக்கத்தில் எதிர்மறைகளின் போராட்டம்  சமூகமாக  தகவமைத்துக் கொண்ட  உடல்களின்  தொகுப்புக்குள்ளும்  விரிவடைகின்றது. எதிர்மறைகளின்  போராட்டத்தின் ஒன்றின்  மீதான  பிரிதொன்றின்  அதிகாரங்கள் கட்டமைக்கப்பட்டு இயங்கு தளத்தை சாத்தியப்படுத்திக் கொண்டே இயங்கியல்  தொடர்புகின்றது.   உடல்கள் இயக்கங்களுக்கு  ஆதாரமான  அக, புறக் காரணிகளை  தகவமைக்கும் வெவ்வேறான அலகுகள் உற்பத்தியாகி அவைகள்  மீதான அதிகாரங்களும், அவைகளுக்குள்ளேயா  அதிகாரங்களும்  உருவாகின்றன. இயங்கும் அனைத்துக்கும் பொதுவானதாக இது நிகழ்கின்றது. அவ்வகையில் இயங்கும் உடல்கள் எதிர்மறைகளாக பிளவுபட்டு அவைகளுக்கான அதிகாரங்களுடன் தனது போராட்டங்களை  அவை இயங்கும் பல்வேறு  அலகுகள் மீது நிகழ்த்தி வாழ்வியலை தொடருகின்றன. உடல்களின் வாழ்வியல்  தன்மையை  தீர்மானிக்கும் சுதந்திரத்தை, அது சார்ந்து இயங்கும்  புறநிலைக் காரணிகள்  பெற்றிருக்கின்றன.  புறநிலைக்  காரணிகளின்  எதிர்மறை  இயக்கம்  உடல்களின் தொகுப்பிலும்  நேர்முரண்களை  தோற்றுவிக்கும்  தன்மையோடு  நிகழ்கின்றது.   மனுட வரலாறு  முழுக்க  இதன் பதிவுகள்  தொடருகின்றன. 

                                  இயற்கையின்  புதிர்களை  விடுத்துக் கொண்டே அதன்  நிரூபணங்களோடு  மேலும் மேலும்  புதிர்களை  விடுவிக்கும்  முயற்சியில் நிரூபணங்களை  கண்டடையும்  முயற்சியில் உடல்களின்  இயங்கியல்  தொடருகின்றன.  இதன் அடிப்படை  அச்சமே.  அச்சம்  தவிர்க்க  அச்சமூட்டிய  நிகழ்வின் காரணிகளை  தேடுவதும்,  நிரூபணம்  கொள்வதும் தொடர்கின்றது. வாழ்வியலை உறுதிப்படுத்தும் புறநிலைக்  காரணிகளுக்கு  தடைகளான  அச்சமூட்டும்  புதிர்களை விடுவிக்க  வேண்டிய நிர்பந்தம் உடல்களுக்கு  ஏற்படுகின்றது. இது அரசியல், பொருளாதார புறகாரணிகளில் வெளிப்பட்டு  வெவ்வேறான அதிகாரங்களையும், அதன் தீவிர- மிதவாத தன்மைகளை  நிர்ணயிக்கிறது.  

                        இவ்வகையில்  கூடங்குளம்  போராட்டத்தையும் அணுகலாம்.   கூடங்குளம் பிரச்சனை  இரண்டு பிரிவுகளில்  விவாதிக்க  வேண்டியவை. 
              1)அணு விஞ்ஞானம்  2)  அதன் மீதான வினைகள் 
                          விஞ்ஞானம்,   மெய்ஞானம்  இருபிரிவுகளிலும்  அணுவைப்  பற்றிய புரிதல்  மனித உடல்களின்  ஒரு பெரும் பாய்ச்சல்  என்ற குறிப்பிடலாம்.   உடல்களின்  இயங்கு தளத்தை  உத்திரவாதம்  செய்யும் புறநிலைக் காரணிகளின்  பல்வேறு அலகுகளில்  மிகப் பெரிய  மாற்றங்களை  நிகழ்த்திய  வல்லமையைக்  கொண்டது.   அணு விஞ்ஞானம் உடல்களில்  நிகழும்  பல்வேறு அணுசேர்க்கையை  ஒழுங்குபடுத்துவதன் மூலம்  அவைகளின்  வினைகள் உடல் தன்மையில்  தோற்றுவிக்கும்  விளைவுகளை  விளங்கிக் கொண்டதன் மூலம் மெய்ஞானமும் விரிவடைந்தது.  புறநிலை காரணிகளின்  இயக்கத்தில் அறிவியல்  தொழில்நுட்ப  வளர்ச்சியில்  அணு விஞ்ஞானம் தவிர்க்க இயலாத  இடத்தைப் பிடித்துக் கொண்டுவிட்டது.   எந்த ஒரு நிகழ்விலும்  ஊடாடும்  எதிர்மறைகளின் வினைவிளைவு அணு விஞ்ஞானத்தில் செயல்பட்டது.   எதிர்மறைகளின்  போராட்டத்தில் பேரச்சம் கொள்ள வைக்கும் அணு ஆயுதங்கள்  குவித்துக் கொள்ளும் பண்பு வளர்ந்து விட்டது.  அணு அதிகாரமற்ற  அரசியல் அதிகாரம்  செயலற்றதாக  அறிய வேண்டிய  நிர்பந்தத்திற்குள்  உடல்கள் தங்களை  திணித்துக்  கொண்டுவிட்டன.   அச்சத்தை  தவிர்க்க அணுவை  அறிந்து  அணுப் பேராற்றலின்  எதிர்மறை  விளைவுகளின் மீதான அச்சத்துடனான  அதிகார அரசியலை  உடல்கள்  மேற்கொள்ள வேண்டிய  நிர்பந்தத்திற்கு  தள்ளப்பட்டுள்ளன. அச்சம் கொள்ளவைப்பவை  அணு உலைகள்  மட்டுமல்ல  அணு ஆயுதங்களும்  கூட. 
                      உடல்களின்  தொகுப்பில் எதிர்மறைகளின்  உராய்வில்  பேரழிவு  ஆயுத வளர்ச்சி  நிலையில் அதிகார  நிலைப்படுத்தல் போராட்டத்தில்  பேரச்சத்தை நிறுவ   அணு ஆயுதங்கள்  குவிக்கப்படுகின்றன.  அணு ஆயுதம்  மூலமான அழிவு  எதிர் இரு பிரிவுக்கும் உண்டு என்பதால்  பேரச்சத்தை  நிறுவதோடு  மிதவாத  போக்கையும்  ஆளும் அதிகாரங்கள்  மேற்கொள்கின்றன. அணு தொழில்நுட்பம்  முற்றாக வளர்ச்சியடையாத  நிலையில் உள்ளது.   அதன் பரிமாணங்கள் வளர்ச்சி  நிலையில் தான்  உள்ளன. அச்சம்  தொடர்ந்த வண்ணம்  இருக்க  புறநிலை கூறுகள் மீதான  பாதுகாப்பு  கேள்வியாக  தொடருகின்றன. 
                      இந்நிலையில்  முரண்களின்  உராய்வில்  எதிர்வினைகள்  தொடர்ந்த வண்ணம்  இருக்கின்றது. அணு தொழில்நுட்பத்தின்  மீதான அச்சத்தால்  பேரழிவு  ஆயுதமாக  பரிணமிக்கும்  இயல்பு கருதி  அதை புறக்கணிக்க  எத்தனிக்கும்  உடல்களின்  தொகுப்பிற்கும்,  அவ்வகை ஆயுதங்களை  நிறுவி பேரச்சத்தின்  மூலம் அதிகாரங்களை  நிலைப்படுத்தும் தொகுப்பிற்குமான உரசல்கள் தொடர்கின்றன. அதிகார  நிலைப்படுத்துவதில்  ஆளும் அதிகாரத்தின்  செயல் தந்திரத்தில்  ஊசலாட்டங்கள், பலாத்கார வழிமுறைகளிலிருந்து தோற்ற அளவிலான  சலுகைகள்  வழங்கும் வழிமுறைகளுக்குச்  செல்வதற்கான  மாறுதல்கள்  கடந்த அரை நூற்றாண்டின்  சமூக வரலாற்றுக்குரிய  குண விசேஷம்.  
                       சமூக தளத்தில் உடல்களின்  தொகுப்புகளின்  இயக்கத்தை  புறகாரணிகளான  பொருளியல்  உறவுகள்  செயல்வழிபடுத்துகின்றன.  இவை அவைகளுக்குள் அடுக்கு  பிரிவிணைகளை ஏற்படுத்தி எதிர்மறை முரணியக்கத்திற்கான களத்தை  நிறுவுகின்றன.  இந்த அடுக்கில் நடுத்தர  பொருளியல்  உறவு அதிகாரங்களைக்  கொண்ட  உடல் தொகுப்புகளின்  அதிகாரம்  ஊசலாட்டத்  தன்மை கொண்டுள்ளன.  எல்லா வகை  எதிர்மறை  முரணியக்கத்திலும்  நிலைத்த  அதிகாரத்தை  நோக்கிய  செயல்வழியை  பின்பற்றாமல்  குருங்குழுக்களாக  தகவமைந்து  அதிகாரத்துவம், வம்சாவழி  தலைமை,   தண்டனை விதிக்கும் தன்மை,   கட்டளை வாதம்,   தனி உடல்  வீரசாகசம், தாரளவாதம், அதீத சனநாயகம், வணிகக்குழு  மனோநிலை,  பகுதிசார்ந்த  உடல்கள், நட்பு உடல்கள்  குழு சார்ந்த உடல்களுக்கு  சலுகை காட்டும் ரசிக மனோநிலை என்ற அளவில் தொகுப்பு கொள்கின்றன. அணு  தொழில் நுட்பத்திற்கெதிரான  போராட்டத்திலும்  இத்தகைய போக்குகள்  நீடிக்க  பொருளியல்  உறவுகளில் நடுத்தர  தன்மையுடைய  தலைமைச் சக்திகளின்  ஊசலாட்டமே  பிரதான  பின்னடைவுகளை  தோற்றுவிக்கின்றன. 
                   சமூக  தளத்தில் உடல்களின்  எதிர்மறை  முரணியக்கத்தின் மோதல்  போக்கில்  வரலாற்று அனுபவங்களைக் கொண்டு ஆளும் அதிகாரங்கள் தங்களை  நிலைப்படுத்திக்  கொள்ள பலாத்கார வழியை மட்டும் நம்பவில்லை  சலுகைகள்  வழங்கும் மிதவாதத்தையும்  கொண்டிருக்கிறது.   அவ்வகையில்  சலுகைகள்  வழங்கும் புறகாரணிகளான  அலகுகளை தன்னார்வ  தொண்டில்   ஈடுபட்டு  உடல்களின்  வாழ்வியல்  மேம்பாட்டிற்கு உதவுபவைகளாக  கட்டமைக்கப்பட்டு  மோதல்,  கலக நிகழ்வுகள் தீவிர  பலாத்கார தன்மை  உடையதாக  இல்லாமல்  இருக்கும்படி  பார்த்துக் கொள்ளும்  பொறுப்பை  ஆளும் அதிகாரங்கள்  இவ்வகை  அலகுகளுக்கு  அளித்துள்ளன.  காந்தியியமும்  அதன்  கட்டமைப்பும்  இதற்கு  உதவுகின்றன.  அதிகாரப்  போட்டிகளின்  செயல்வழிகளில்  இவ்வகை அலகுகளின்  பங்கு இன்று தீவிர  பரிசீலணைக்  குள்ளாக வேண்டிய  ஒன்றாகி உள்ளது.  
                               உடல் தொகுப்புகளின் எதிர்மறை முரண் இயக்கத்தில் அறங்கள்  கற்பிக்கப்படுகின்றன.  கற்பிக்கப்படும்  அறம் வழி நடக்க  உடல்கள்  வற்புறுத்தப் படுகின்றன. முரண் இயக்கத்தின்  ஆட்படும் உடல்கள்  ஆளும்  உடல்களுக்கு  எதிரான எதிர் வினைகளை  அறவழி  நின்று நடத்த  ஊக்கப்படுத்தப்படுகின்றன.  கற்பிக்கப் பட்ட  அறவழி  தவிர்த்து  எதிர்வினையாற்றும்  உடல்கள் மீது  பேரச்சம்  கொள்ள வைக்கும்  பலவந்தம்  பிரயோகமாகின்றது. இது அச்சம்  கொள்ள வைக்கும்  ஆயுதங்களின்  அதிகாரங்களாக  நிர்மாணிக்கப்  படுகின்றது. அறவழி  எதிர்வினைகள்  பலவந்த நிலைக்கு  பரிணமிக்காமல்  இருக்க இலக்கியங்களும்  ஒற்று உணர்த்தி  நிழல்யுத்தம்  செய்யும் அலகுகளும்  உருவாக்கப்படுகின்றன. 
மேற்கண்ட  விஷயங்களின்  அடிப்படையில்  கூடங்குளம்  போராட்டம்  இங்கு  நிலவும்  வாழ்வியல்  நெடுக்கடிகளின்  மீது உடல்  தொகுப்புகளின் முரணியக்க  போராட்டமாகவும்  அதன் மீதான ஆளும் அதிகாரத்தின் மிதவாத அணுமுறை  அடிப்படையிலான ஒடுக்கு முறையாகவும்  அனுமானிக்கலாம்.  இப்போராட்டத்தின்  தலைமை  பொருளியியல்  தளத்தில்  பெரும் மூலதன  திரட்சி  அதிகாரங்களுக்கு  ஆட்படும்  சிறு மூலதன  அதிகாரங்கள்  அவற்றின்  காயலாங்கடை  சரக்குகளைக் கூட புதியனவாகவும் புனிதமானதாகவும்  கொண்டாடும்  நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன.  அணு உலைகளும்  அப்படித்தான். 
                    பெரும் மூலதன திரட்சி  அதிகாரங்கள் நெருக்கடிக்குள்ளாகின்றன.  அவ்வகை  நெருக்கடிகளை  ஆட்படும்  அதிகாரம் கொண்ட  தளங்களுக்கு  நகர்த்தி  தற்காலிக  தீர்வு  நோக்கும் போது  பொருளியியல் ஆதாயத்திற்கான  செயல்வழியாக  இவ்வகை  சந்தையை  நிர்ணயித்து அதனோடு உடல்களின் புறநிலைக் காரணிகளை  இணைக்கின்றன. உடல்கள் வணிக மனோ நிலைக்கு மாற்றப்பட்டு சந்தை பொருளாதாரத்தோடு உருவாக்கம்  கொள்கின்றன. நெருக்கடிகளை  தீர்த்துக் கொள்ள  உதவும்  லாபம் மட்டும் இவ்வகை  சந்தையின்  நோக்கம்.   அதற்கான  ஆளும்  அதிகாரங்கள்  நிறுவப்படுகின்றன.  உடலின் உணர்வு  தளத்தில்  பேரச்சத்தை  நிறுவும் மனநிலையை உற்பத்தி செய்யும்  வகையான  ஊடக,  இலக்கிய தயாரிப்புகளை  ஆளும் அதிகாரங்கள்  ஊக்குவித்து உற்பத்தி செய்கின்றன.  இவை கூடங்குளம்  போராட்ட காலகட்டத்திலும் நடந்தேரியுள்ளது. இதன்மூலம்காயலாங்கடை  தொழில்நுட்பத்தையும், சரக்கையும்  சந்தைப்படுத்தி  லாபம் பார்க்கின்றன மூலதன  திரட்சி கொண்ட  அதிகாரங்கள்.  
                         கூடங்குளம்  போராட்டம்  வழங்கிய அனுபவங்களாக  உணரக்கூடியவை.

1)  அணு ஆயுத  பேரழிவுக்கு  எதிரான போராட்டத்தின்  தொடர்ச்சியாகவும்,   பாதுகாப்பாற்ற  தொழில்நுட்ப ரீதியாக  முழுமை  பெறாத  தொழில்நுட்பத்தின்  அடிப்படையிலான  அணு உலைக்கெதிரான போராட்டமாகவும்  வளர்க்கப்படாதது.  
2)  பெரும் மூலதன  திரட்சியின்  அதிகாரங்கள்  தங்களின்  கட்டுப்பாட்டில்  கொண்டுவரப்பட்ட  ஆட்படும்  அதிகாரங்களின்  உடல் தொகுப்புகள் மீது தங்கள்  நெருக்கடிகளை  சுமத்தும்  தீர்வுகளுக்கு  எதிராக  உலக தாராள மயமாக்களின்  அடிப்படையில்  அணு தொழில்நுட்பத்தை  திணிப்பதற்கு  எதிராக நிறுவிக்  கொள்ளாதது. 
3)  குறுகிய வரம்புகளுக்குட்பட்ட  தனிமனித உடல்களின்  அனுபவங்களைக்  கொண்டும்,   சர்வதேச  போராட்ட  அனுபவங்களை  கொண்ட  உறுதியான அமைப்பு  வழி செயல் தந்திரங்களை  கணக்கில் கொண்டு  ஆளும் அதிகாரங்களுக்குள்ளேயான  முரண்பாடுகளை  கையாண்டு போராட்டத்திற்கான  நட்பு சக்திகளை திரட்டாதது.  
4)  காலம் கடந்த  நிலைப் போராட்டமாக  பகுதிப் போராட்டமாக  குறுக்கப்படக்கூடிய  கொள்கைகளையும்  முழக்கங்களையும்  பிரதானப்படுத்தியதும்,   சமூக தளத்தில் தற்போதைய  முதன்மையாக  அலை இறக்க  உணர்வெழுச்சிகளைக் கொண்டுள்ள  உடல் தொகுப்புகளின்  பிற்போக்கு  தனங்களை  கணக்கிடாமை.
5)   ஆளும் அதிகாரங்களுக்கு  எதிரான எழுச்சிகளை  பலவந்தமாக  ஒடுக்குவதற்கு  மாற்றாக  முன்மொழிவு  கொள்ளும் சலுகை  வழங்கும் மிதவாத போக்கின்  அலகுகளாக  செயல்படும்  தன்னார்வ தொண்டு  நிறுவனங்கள்  காட்டிய முனைப்பு  மற்றும் அதன்  நிர்ணயிக்கப்பட்ட  எல்லைகளுக்குள்ளே நின்று போராடியது. 
6)   பெரும் மூலதன திரட்சி அதிகாரங்களுக்கிடையேயான  சந்தைப் போட்டியில்,   ஒரு சார்பாக  மறைமுகமாக  அதன் நலன்களுக்கு  சேவை செய்யும்  போக்கு கொண்டதாக  அமைந்தது. 
7) அணு தொழில்நுட்பத்தை  முற்றிலுமாக  மறுதலித்து  விட்டதோடு,   அதன் பாதுகாப்பையும், இழப்பீட்டையும்  முன்னிருத்தாமையும்,  போராட்டத்தின் போக்கு  ஏற்ப கள வியூகங்களை  வகுக்காதது. 
போன்றவை  பிரதானமாகவும்  உடனடியாக  அனுமானித்து  உணரமுடிகின்றது.   பரபரப்பாக  பேசப்பட்டு  எவ்வித கோரிக்கைகளை  பூர்த்தி செய்து  கொள்ளாமல் ஓய்ந்து போன  போராட்டம்  கோரிக்கை விழையும்  உடல்களில்  விரக்தியடையும்  நம்பிக்கை  வறட்சியையும்  தான் தோற்றுவித்திருக்கின்றது.  ஆனால் இது வரலாற்றுக்கு புதிதல்ல. 
# kudangulam # atomic power station

Friday, March 30, 2012

கலைடாஸ்கோப்பின் பிம்பங்களுக்குள்  கரையும் அனுமானத்தின் பிரமாணம்

கலைடாஸ்கோப்பின் பிம்பங்களுக்குள்  கரையும் அனுமானத்தின் பிரமாணம்

                           மரம்  சும்மா இருந்தாலும்  காற்று விடுவதாக  இல்லை தான்.  எவ்வளவு தான்  ஜெயமோகனை விட்டு விலகி  நின்று வாசிப்பை  தொடர்ந்தாலும்  மீண்டும் சுழற்சிக்குள்  வரவேண்டியுள்ளது.  விவாதத்தில் உள்ள  கட்டுரை பதிலில் ஜெயமோகன் பல முரண்பட்ட  நிலைகளை எடுத்து  அடுத்த அடுத்த பகுதிகளிலேயே தன்னை மறுத்தே நகருகின்றார்.  பல்வேறு அதிகாரங்களின் செயல் வெளியில் அரசியலும் ஒன்று. இதன் இழைகளுக்குள் ஒவ்வொரு உடலும் கட்டப்பட்டிருக்கும் நிலையில் இலக்கிய வாதி நான் தனித்தியங்குபவன் எந்த அரசியலிலும் சாராதவன் என்று  அந்தரத்தில் தொங்க முடியாது. அப்படிக் கூறுவதில் அரசியலும், அதிகாரமும் உள்ளீடானது. நிரூப்பிக்கப்பட்ட உண்மைகளை  கேள்விக்குள்ளாக்கி  நம்பிக்கை வறட்சியை ஏற்படுத்தும் முயற்சிகள் இப்படியாகவும்  தொடருகின்றன.  கலைடாஸ்கோப்பு பிம்பங்களாக  ஜெயமோகன் சமூகத்தில்  பரபரப்பாக பேசப்படும் எல்லாவிதத்திலும்  மறுப்பக்கம்,  மறுப்பக்கத்தின்  மறுபக்கம் உண்டு அவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பார்த்தால் மட்டுமே இலக்கிய வாதியாக  நான் பேச முடியும் எழுத்தாளானால் அவற்றின் எல்லா தருணத்திலும் பேசிக்கொண்டிருக்க முடியாது என்று நிலைப்பாட்டை எடுத்து இருக்கிறார்.  அது அவரது  நிலை என்று  விட்டுவிடலாம் ஆனால் ‘‘எல்லா தரப்பும் மௌனம் காக்கும் போது இலக்கிய வாதியின் குரல் எழுகிறது’’ என்று தான்  தன் திருவாய் மொழிக்கு கருத்தியல் நிலைப்பாடாக வியாக்கியானம் வரும் போது நாம் எழ வேண்டியுள்ளது. எந்த தரப்பு வேளச்சேரி சம்பவத்திற்கு மவுனம் காத்தது என்று விளங்கிக் கொள்ள முடியவில்லை.
              ‘‘மக்களின் கூட்டின் தார்மீகமே சமூகத்தின் தண்டிக்கும் சக்தியாக இருக்க வேண்டும் என்பதை தொடர்ச்சியாக நிறுவிக்கொண்டிருக்கம் செயல்பாடு’’ இதில் எவ்வகையான அதிகாரம் நிலைக் கொண்டிருக்கிறது என்பது விளங்காத செய்தி. மக்களின் கூட்டான தார்மீகம் சமூக இயங்கியல் விதியில் இரு எதிலிகள் எல்லாவற்றிலும் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. மக்களின் கூட்டான தார்மீகம் என ‘ஜெயமோகன்’  கற்பனாவாதம் ஒரு நிழல் யுத்தம்.
                   ஒரு உடலோ அல்லது ஒரு அலகோ உடமை என்று  (பொருள், கருத்து, நுட்பம், கலை)  அறிவித்ததை  உணர்ந்ததை  பெற்றதை வேறு ஒரு உடலோ அலகோ  அவைகளுக்குள் அங்கீகரித்துக் கொண்ட  பரிவர்த்தனை உறவுகளைத் தாண்டி உடமையாக்கி கொள்வது  களவாக, திருட்டாக குறைந்தபட்சம் வரையறைப் படுத்த முடியும்.
                         அது உடமை அதிகாரத்தின் மீதான பிரிதென்றின் அத்துமீறல் அதிகாரமே. அரசு என்ற அலகின் அதிகாரங்கள் உடமை அதிகார பாதுகாப்பு என்ற அடிப்படையில் இவ்வகை அத்துமீறல் அதிகாரங்களை அனுமதிப்பதில்லை. அந்த அலகிற்குள்ளே நிகழும் அளவு  திருட்டு, ஊழல், லஞ்சம் போன்ற நிலை பொருளாதார அத்துமீறல்கள் அவ்வமைப்பு அதிகாரத்தை  சிதைக்காதவரை  ஆட்படும் அதிகாரங்கள்  அனுமதி பெறுகின்றன ஊக்கப்படுத்தப்படுகின்றன. இவை ஒழுக்க விதிக்கட்கு  உட்பட்டு சில மரபெழுக்கமாகி  அறமாக கற்பிக்கப்படுகின்றன. அரசு என்ற அலகு அனைத்துக்கும் பொதுவானதாக  சார்பற்றதாக கற்பிக்கப்பட்டு பொது புத்தியில் நிறுவப்படுகின்றது. ஜெயமோகன் ஏற்றுக்கொண்டது போல் ‘‘பிரமாண்டமான உள்பிரிவு உள்ள  ஒரு ஜனநாயகம் நம்முடையது’’ என்று          
                       பொருளியல் ரீதியாக அனைத்து உறவுகளும்  நிறுவப்பட்டு நிலைப்படும் அதிகாரச் சூழலில் அதற்கு எதிரான ஒழுங்கமைக்கப்படாத  கலகங்களலாக  அத்துமீறல்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன.  உடமை அதிகாரப் பண்புகளை  சுவைத்து அதுவே இன்பமாகவும், நிலைத்து மகிழ்வாகவும், பாதுகாப்பாகவும் உணரும் உடல்கள் ஆசையாக அதையே விழைகின்றன. இறந்த காலப் பண்புகளான  நிகழ்காலத்தில் நிறுவி அப்படியே எதிர்காலத்தை  விழையும்  ஆசைகளோடு  திரிகின்றன. அதற்கு பங்கம் வருகின்ற போது பதைபதைத்து  எதிர்வினையாற்றுகின்றன. தனித்தோ, கூட்டாகவே  தங்களின்  அதிகாரங்களை  நிகழ்த்துகின்றன.  இங்கு எதிலிகள்  பிரத்யட்சனமாகின்றன. இந்த மோதலில்  எந்த அலகு பிரிதொன்றின்  மீது அச்சத்தை  நிறுவி நிலைப்படுத்துகின்றதோ  அந்த அதிகாரமே  நீடிக்கின்றன.  இவை சலனப்படும்  போது, சிதைவு  கொள்ளும் போது  அவை புத்திப் பதிவில்   நினைவூட்ட  அவ்வப்போது  இது போன்ற  ‘என்கவுண்டர்’ ரீதியான உடல் சிதைவுகள்,  சிறையடைப்புகள்  பிரத்யட்சனம்.
                     இதில் ஜெயமோகன் விழையும் ‘‘மக்களின்  கூட்டான தார்மீகம்’’  என்பது  நிழலை  மோகிப்பது  தான்.
                     ‘‘எலியின்  உயிர்வதையை  மட்டுமே சொல்வது  அல்ல,  பூனையின்  பசியையும்  கணக்கில் கொண்டு  பேசுவது  இலக்கியம். ஜெயமோகன் இதில்  செயல்படும்  அதிகாரங்களை  கணக்கில் எடுத்துக் கொள்ளாதது  ஜெயமோகன் இலக்கியம் பூனை பசிக்கு  எலியை மட்டுமே வதை செய்வதை  விழையும்  அதிகாரங்களுக்கு   ஆதரவானது  தான் ஜெயமோகன் இலக்கிய கோட்பாடு.
குற்றங்களை ஒழுக்கம்/ அறம்  நிலைநின்று  பேசும் உடல்கள்  குற்றத்திற்கான காரணங்களை  பேசுவதில்லை.  போர் குற்றங்களை மட்டுமே  பேசும் போது  போருக்கான காரணங்களை  வசதியாக மறந்து  மறைக்கப்படுவது போன்று  அதை  பேசினால்  நிரூவி  பாதுகாக்கப்படும்  பிரமாணங்களுக்கு எதிரான  பிரமாணம் தோன்றும் என்பதால்
                            ‘‘களவு திருட்டு  போன்றவற்றை அறம் சார்ந்து  பார்க்கமுடியாது.  தனிமனிதர்களை அடிப்படை அலகாகக் கொண்ட நமது  சமூகத்தில் அது  ஒழுக்கம் சார்ந்த ஒன்றே அதனால்   ஒழுக்கத்தை கற்க  சீர்த்திருத்த  சிறைக் கூட்டம்  நீதிமன்றம், பள்ளிக்கூடம் எல்லாம் உள்ளன. அதை மீறி அதை ஒரு அறப் பிரச்சனையாக  மாற்றுவதன் மூலம்  அதிகார நிறுவனங்களின் கொலையை  நியாயப்படுத்துவதன்  மூலம், அதற்கு உடந்தையாக  பொதுப்புத்தியில் உருவாகியுள்ள  கருத்தை மீட்டுருவாக்கம் செய்வது தான் மூலம்  ஒரு கொலை  மனநிலையை  கொலைக்கான மனசாட்சியை  உருவாக்கும் செயலையே  செய்கின்றனர்.   வரலாற்றால்  உள்ளிருத்தப்பட்ட மனித மனதின் வன்முறையாய்  இப்படி ‘அறம்’ பேசி  நியாயப்படுத்துவதன் மூலம்  பாசிச மன கட்டமைப்பில் கட்டும் பணியை இந்த இலக்கிய  எழுத்தாளர்கள்  மிகச் சிறப்பாக நிறைவேற்றுகின்றார்கள். இப்படித்தான்  எழுத்து எந்திரம் வன்முறை  எந்திரத்தைவிட கொடூரமானதாக  மாறுவிடுகின்றது.’’ என்ற ஜமாலனது  கருத்து பிரமாணம்  மிகப் பொருத்தமான  ஏற்க கூடியதே.
                             பொருளியல் அமைப்பில்  சமச்சீரற்ற  வளர்ச்சியில்  இந்தியாவில்    உழைக்கும் கூட்டம்  புலம் பெயர்ந்தே  பல  மாநிலங்களின்  வாழவேண்டிய  சூழலில் இந்தியா   பெருமைக்குரியதாகி  நிற்கிறது.  இதில் பீகாரிகள்  நேரடி உடல் உழைப்பு செலுத்தப்படும் பல்வேறு அலகுகளில்   அவர்கள் புலம் பெயர்ந்து  வாழ்கின்றனர்.  அவர்களை குற்றப்  பரம்பரை  போல்   கட்ட முயல்வது  தான்   இலக்கிய ஆக்கமாக  ஜெயமோகன் தெரிகிறது. குறைந்த கூலிக்கு அவர்களின் உழைப்பு  அபகரிக்கப்படுவதும்,  அடிப்படை  வசதிகள் கூட உத்தரவாதம்  செய்யப்படாத  வாழ்க்கைச் சூழலைப் பற்றி  பேசாமல் பிகாரில் பல கிராமங்கள்  திருடர்கள்  கிராமம்  என  பிரதானப்  படுத்துவது  எந்த கணக்கில் கொள்வது.
                                                     அனுமானம், பிரத்யட்சனம், பிரமாணம் என்பதில் உடலின் பௌதீகவேதிவினைச்  செயல்பாட்டில்  அனுமானத்திறன் செயல்வழியை  நிர்ணயம் செய்வதில்  இயற்கை மூலப்பொருள்  சேர்க்கை அதன்  பௌதீக வேதிவினை  மற்றும் உடற்கூறு நுண்அமைப்பு செயல்பாடுகள், தீவிர பங்காற்றுகின்றன. இது உடலுக்கு உடல் வேறுபடும். ஜெயமோகன் கூறுகள் தீவிர தன்மையற்று, அவ்வகையான  அனுமானங்களுக்கும் பிரமாணங்களுக்கும்  செயல்வழி  கொள்கின்றன.
                            அரச  பயங்கரவாதம்  மோதல்களை  ‘‘ அவர்கள்  தாக்குவார்கள் என்பதை அனுமானித்து  தாக்கினோம்’’ அவர்கள் தாக்கினார்கள்   தாக்கினோம்  என்ற  வாதத்தை வைக்கின்றனர்.  இரு எதிலிகளும் முரண்களை  சமரசப்படுத்தி  கொள்ள ஏற்றுக்கொண்ட  அமைப்பின் அலகுகள்  அதன்  தன்மை இழந்து  மாற்றம் கொண்டு  விடுவதால் பரஸ்பரம்  நம்பிக்கையின்மையால்,   அவற்றில் முரண்கள்  சமரசம்  கொள்ள முடியாது  எனும்  பிரமாணங்களால்   மோதல்   தீவிரமடைகின்றன.  எதிலிகளை  பேரச்சம்  கொள்ள வைக்கும்  பயங்கர  வாதங்கள்  நிகழ்த்தப்படுகின்றன.  தமிழ் மண்ணில்   பரமக்குடி,   வேளச்சேரி,   திண்டுக்கல் இன்றயை நிகழ்வு நாளை  இழந்தகரை  இந்த பட்டியலில்   இடம்பெறக்கூடும்.

                              ‘கைது செய்தும்  மேலிட உத்தரவு   வேறு விதமாய்  வந்ததும்’ சுட்டு விட்டார்கள்’ என்பது ஜெயமோகன்  வாக்குமூலம்  அந்த  மேலிடத்தை  பூடகமாக  சொல்லியிருந்தால்   கூட ஜெயமோகன்  கூறும் ‘பிரமாண்டமான  உள்விரிவுள்ள  ஜனநாயகம்   நம்முடையது’’ என்று  ஏற்றுக்  கொள்ளலாம்.  அதை வெளிப்படையாக  கூற இயலா  பேரச்சத்தை நிறுவிய அதிகாரச்  சூழலுள்  வாழ்ந்து கொண்டிருப்பதை  ஜெயமோகன்  உணர்வாரா?   இதையெல்லாம்  உணரும்போது  அவரது  எழுத்துக்கள்  விரத்தியை  விரிவாக  பேசும்.      

Tuesday, February 14, 2012

கல்வி எந்திரங்களும்..


தகவல் குப்பையள்ளும் கல்வி எந்திரங்களும்....

                                 தகவல் குப்பையள்ளும்  கல்வி எந்திரங்களும்....
                                அவையில் முந்தியிருப்ப  ....  அதிகாரங்கள்.
                                             பொறியாளர் இரா.கோமகன்.

 ஆசிரியருக்கும் மாணவனுக்கும், மாணவருக்கும் பெற்றோருக்கும்  பெற்றோருக்கும்  ஆசிரியருக்கும்  இடையே  நிலவும் உறவுகள்  குறிப்பிட்ட அதிகாரத்தில் கட்டமைகின்றது. கற்றல் என்பது சந்தைப் போட்டியில் விலைபோகும் அறிவை ஈட்டல்  என்பதாகவும்,   பொருளியியல்  திரட்சி நிலைப்படுத்தும் சந்தைக்கான உடல்களை தயாரிக்கும்  பணியை மேற்கொள்வதே  கல்வி நிறுவனங்களின்  பணி என்றும்,  அங்கு நிலைப்படும்  அதிகாரத்தை ஏற்று, அதற்கு  உட்பட்டு  இயங்க  உடல்  ‘அறம்’ படுத்தப்பட்ட  உடல்களாக  மாற்றும்  வேலையை  கூடவே செய்கிறது.  கற்றல் என்பது  தன்னையறிதல்,   தன் சூழலறிதல்,   சுந்திர  அறிவியக்கத்தை  அறிதல், தன்னை ஆளும் அதிகாரமறிதல்  இன்னும் விரிவு  கொள்ளும் அறிதல்  போக்குகளின்றி  உடல்களை  அந்நியமாக்கும்  ஆளுதல்,   ஆட்படுதல்  என்ற அதிகாரப் போட்டிக்கு  தயாராக்குகின்றன.  உடல் இறந்த காலத்தில் வாழ்வதற்கான  கல்வியை தருவதற்காகவே கல்வி கூடங்கள் இயங்குகின்றன. ஒவ்வொரு உயிரும்  உடலும்  தனித்தன்மையுடன்  தான் விளங்குகின்றன.  இத்தனித்தன்மைகளை  களைந்து  அல்லது அவற்றை  ஒரு பொது அதிகாரத்தின் கீழ் கட்டமைக்கப் படுவதே கல்வியின்  நோக்கமாக  திகழ்கின்றது. உடல், மனம், உணர்வு  சக்தி நிலைகளில்  இளமையால்  இயல் பூக்கத்தில் நிகழும் பௌதீக வினைகளின் மையத்தை ஆளும் அதிகாரத்திற்கான பண்புகளை கொண்டதாக மாற்றியமைக்க,  கற்பிக்கப்படும் கல்வியும், திட்டமும், செயல்முறைகளும் குறிப்பிட்ட அதிகாரமாக கட்டமைக்கப்படுகின்றது. இந்நிறுவனத்தில் அறிவுருவாக்கும்  ஆசிரியர்  உடல்கள் ஆளும்  அதிகாரப் பண்பையும், கற்கும் மாணவ உடல்கள் அதற்கு  ஆட்படும் பண்பையும்  ‘குருசிஷ்ய’ உறவாக கற்பிக்கப்படுகின்றது.   மாணவ உடலுக்கிடையே ஆளும் அதிகாரத்திற்கு ஆட்படும் பண்புகள்  சிறந்ததெனவும், கலகம் செய்யும் உடல்கள் அறம் அறுத்து அந்நியமாகும் உடல்களாக  அறியப் படுகின்றது. சந்தைப் பொருளியியல் சூழலில்  வணிகப்  பொருளாக  மாற்றப்பட்ட கல்வியைக் கொண்டு உபரியை  உற்பத்தி செய்யும் உடல்களாக  ஆசிரிய  உடல்கள் தயாரிக்கப்பட்டு  அதிகாரமளிக்கப்படுகின்றது. கல்வித் துறையில்  பன்னாட்டு ஏகபோக பொருளியல் திரட்சி செயல்படுவதால் நிறுவனமாக்கப்பட்ட வணிகச்  செயல்பாட்டுக்குள் ‘குரு’ எந்த உடல் திணிக்கப்பட்டு  வார்ப்புகளாக  ஆசிரிய உடல்கள் தகவமைகின்றன.  சந்தை மதிப்புக்குரிய  அறிவை,  ஆளுமையை  தயாரிக்கும் பணியில்,  போட்டியில் சிக்கிய  ஆசிரிய உடல்கள்  உடல் தொகுப்புகள்  இயங்கும் சமூகத் தளத்திலும்  இயங்குவதால்  ஆளும் அதிகாரத்திற்குட்பட்டு  சுதந்திர மற்ற  இருக்கமான வெளியில்  உலவும் உடல்களாகவும் அதன்  வினை எதிர்வினைகளுக்கு  ஆட்படும் உடல்களாகவும் உள்ளன. கற்றல், கற்பித்தல்  என்பன ஆளப்படும்  பண்பாக முன்னதும்  ஆளும் பண்பாக பின்னதும்  ஆக்கப்பட்டு  நிலையில்  இவைகளில்  தொடர்புரும்  உடல்களும்  இதன் தன்மைக்கு ஏதுவாகின்றன.
‘இவன் தந்தை என் நோற்றான்  கொல்’  எனும்  இறந்தகால  நிகழ்வின்பத்தின்  மீது வேட்கை கொண்ட  பெற்றோர்  உடல்கள், இறந்த காலத்திலேயே  வாழ்வதால் எதிர்காலத்தின்  மீது கொண்ட  அச்சத்தால்  தன் இருப்பு நீடிக்க  வேண்டும் என்ற  அச்சத்தினூடாக பிள்ளைகள்  உறவை பேணுகின்றன. அதற்கு  சந்தை மதிப்பு பெற்ற அறிவுப்பண்பை  பெற்ற உடலை  உருவாக்க உழைத்து  ‘அவையில் முந்தியிருப்ப’ செயலையாற்றுகின்றன.  உடமை உரிமை அடிப்படையில் ஆளும், ஆளப்படும் பண்புகள் தான் பெற்றோர் மாணவ உடல்களில் ஊடாடுகின்றது. ஆசிரிய உடல்கள் சந்தை நுகர்வுத் தன்மை பெற்றபின்  பெற்றோர்கள்  ஆசிரியரிடையான உறவும்  அந்நிலை எய்தியது. கொடுக்கல் - வாங்கல், உபகாரம் - பிரதி, உபகாரம், உழைப்பிலிருந்து  அந்நியப்பட்ட  உறவு, உற்பத்தியில் உரிமை கோராமையாக  இவ்வுறவு  நீடிக்கின்றது.  பருண்மையான  மூலதன  திரட்சியின்  அதிகாரம்  இருக்கமான  மனம் கொண்ட உடல்களை  உருவாக்குவதோடு  நுண்ணிய (micro level) மாற்றும் பருண்மையன(macro level) அதிகாரச்  செயல்பாடுகளில்  அவற்றிற்குள்ளேயும், அவைகளுக்குள்ளேயும் நிலவும், போட்டி, முட்டல், மோதல்  உறவுகளால் உடல்கள் அழைக்கழிக்கப் படுகின்றன. இங்கு தருவது / பெறுவது, ஆளுவது/ ஆளப்படுவது  என்றபடி ஆசிரிய மாணவ  உறவு இல்லாமல்,   கற்றல்- கற்பித்தல் என்பது பரிமாற்றப் பண்பு கொண்ட உறவாக மாறல் வேண்டும்.
                      "பொய்யான கல்விகற்று பொருண்மயக்கங் கொள்ளமல்
                      மெய்யான ஞானக்கல்வி விரும்புவாய் கன்மனமே" .
                                                    இடைக்காட்டு சித்தர்.

கல்வியை பொருத்தவரை நீண்டகாலமாகவே எது மெய்யான கல்வி, எது பொய்யான கல்வி என்ற வாதங்கள் தொடர்ந்து வந்துள்ளமை காணக்கிடைக்கின்றன.கல்வி தேடலுக்கானதாக அமையாமல் தகவல்களை திணைக்கும் முறையாகவே அமைந்துள்ளது.தேடலில் தோழாமையுறவும், திணித்தலில் ஆளும்-ஆட்படும் உறவும் நிடிக்கும்.தற்போது நிலவும் உற்வு மாறாத வரை, இவ்வதிகாரத்திற்குள்ளேயான  மோதல்கள் நீடித்து  ஆசிரியர்கள் கொலை, மாணவிகள்  கற்பழிப்பு  தொடரும் அமைப்பை  உறுதிப்படுத்தும்.