Monday, April 6, 2015

கம்பீரத்தின் பெருமிதம் சாயாவனம்.



சாயாவனம் - கம்பீரத்தின் பெருமிதம்


வாத்தியாரிடம் அடி வாங்கியதை அவமானமாக நினைக்காமல்,

அதை அடையாளமாக எண்ணி

அவர்களை நினைத்துப்பார்க்கும் தலைமுறையை சேர்ந்ததாலோ என்னவோ
தட்சிணாமூர்த்தியை ரொம்பவே பிடிக்கிறது..

வலி நினைவுக்கு வரவில்லை, அதை சுவாரசியமாக ரசிக்கும் சேட்டை எந்த மனோநிலை எனப் புரியவில்லை.

அடிக்க குச்சு ஒடித்து சப்ளை செய்ய தனி மாணவர் உண்டு.

அவர் கொஞ்சம் பொருப்பாய் படிப்பவர்.

அது என்ன சாபமோ குச்சு கொடுத்தவனை விட அதால அடி வாங்கினவன் தான் உருப்பிட்டிருக்கான்.

ஜமாலன் தான் இதை கட்டுடைத்து பிரித்துப்போட்டு ஆராய வேண்டும்.

ஒரு சுகமான சொரியல் கூட அது.

அதுவும் பொம்பளைப் புள்ளைங்க முன்னாடி அடிவாங்கி அதற்காக நமக்கு பரிந்து அவுங்க அனுதாப்படும் போது மறுமுறை வாங்க வேண்டும் என தோன்றும் விருது அது.

தமிழாசிரியர் கு.நாராயணசாமி உழைப்பு என்ற நாணயத்தின் இரு பக்கமும் அவரே,

பள்ளிக்கூடத்தின் முதல் பிரியட் தமிழ்-

நார்காலியில் குத்துகாலிட்டு உட்கார்ந்து கொண்டு அழகாக சொல்லிக்கொடுப்பார்.

ஒரு நாள் இலக்கண வகுப்பு.

எழுத்து மற்றும் அதன் ஓசை பற்றிய பாடம்
.
பாடம் நடத்தி முடிந்தாகி விட்டது. நடத்திய பாடத்தை ஒவ்வொருவரும் ஒரு பத்தியை எழுந்து நின்று உரக்க படிக்க வேண்டும்
.
நண்பன் கோவிந்தராசுவின் முறை வந்தது.

கம்பீரமாக எழுந்து வாசிக்க தொடங்கினான். அடுத்த நிமிடம் தமிழையாவின் புளியன் மிலாரு, ஒ! இதை டிராசிலேட் பண்ணிதான் ஆகனும்-

அது ஒன்னுமில்லை புளியமரத்துக் குச்சி அதுதான் புளியாமிலாரு, ஒடியாமல் நின்னு பேசும்-

அப்படித்தான் அன்று கோவிந்தராசுவிடம் பேசியது.

இன்னைக்கு இருக்கும் ஊடகச்சுதந்திரம் அன்று இருந்தால் அது நல்ல தீனி பத்திரிக்கைக்கு-

மூன்று நாளாச்சி தண்டித்த கொழுக்கட்டை வீக்கம் வடிய-

அப்படியென்ன தப்பு செஞ்சான் என கேட்டால்
 –
அவன் வாங்கின கொழுக்கட்டைக்கு நீங்கள் 100 மார்க்கு போடுவீர்கள்.

வேறு ஒன்றுமில்லை ஒரு வார்த்தையின் நடுவே கத்தரிக்கோலை உட்டுட்டான்.

‘எழுத்தோசையானது” என்பதை நடுவில் பூந்து “எழுத்து தோசையானது” எனப் பிரித்து படித்து விட்டான்
.
ஆகுண்டா...தோசையும் ஆகும் இட்டிலியும் ஆகும், காலையேலே அம்மாவாசை நினைப்பு வந்துட்டுதா?

என கு.நாராயணசாமி தமிழையா அவன் உடம்பில்  புளியாமிலாரால் கொழுக்கட்டை சுட்டு விட்டார்.

அது ஏன் இப்ப நினைப்பு வந்தது எனக் கேட்டால்.....

பூம்புகாருக்கு அருகில் சாயாவனம் என்ற ஊர் உள்ளது. அதை திருசாய்க்காடு என வரலாறு கூறுகிறது. பல்லவவனேஸ்வரம் எனவும் கூறப்படுகிறது. கோட்செங்கச்சோழன் கட்டிய மாடக்கோவில்களில் இதுவும் ஒன்று. பாடல் பெற்ற ஸ்தலம். சோழ மன்னர்களின் கல்வெட்டுகள் அதிகம் உண்டு. இயற்பகை நாயனாரின் இடம்.

பல்லவர்காலத்திய கோவில். சோழர்களால் பொலிவாக்கப்பட்டு இன்று நம்மால் பெயிண்ட் அடுத்து வீணடிக்கப்பட்ட இடம்.

மிக அமையான சூழல்.

ஒரு சிலர் வந்து தான் சிவனை தொந்திரவு செய்கிறார்கள் மற்றவர்கள் கடற்கரை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றனர்.

ஜோடி ஜோடியா !! எல்லாம் கனல்வரி பாடல் மகிமை. கலைஞரின் ஞான தரிசனம்.

இக்கோவிலில் இருக்கும் தட்சிணாமூர்த்தியை பார்த்து என் தமிழாசிரியர் குத்துகாலிட்டு நார்காலியில் உட்காருவது நினைவுக்கு வந்து விட்டது.

பெரும்பாலும் கோவிலின் முதல் தளத்தில் தெற்குப் புறத்தில் தட்சிணாமூர்த்திக்கு மேலே இப்படி அமர்ந்த கோல சிற்பத்தை பார்க்க முடியும். ஆனல் தேவகோட்டம் எனப்படும் கோவில் வெளிச்சுவரில் காண்பது அபூர்வம்.. Raman Sthapathy Trichy, Sankara Narayanan G  விளக்குவார்.

அடடா என்ன அழகு, ஈர்ப்பு –

முகத்தில் வழிந்தோடும் அமைதி கசடர ஆழக்கற்ற ஆசிரியனுக்கே வாய்க்கும்.


சாயாவனத்தின் மோனதவம் எத்தனை காலத்தை தாண்டி நிற்கிறது நம்மை வரவேற்க-

No comments:

Post a Comment