Thursday, April 9, 2015

தர்மபுரி


நிலவும் சுரண்டல் சமூக அமைப்புக்கு ஏதிராக விழிப்புணர்வு பெற்று அமைப்பாக மக்கள் திரண்ட பகுதி தர்மபுரி.வன்னியர்களும் தலித்துகளும் பெரும்பான்மையாக வாழும் பகுதி, வடமாவட்டங்களில் வன்னியை-தலித் சாதிய மோதல்கள் தீவிரமாக இருந்த காலங்களில் கூட அமைதியாக இருந்த பகுதி. இடதுசாரி தீவிரவாத அரசியலால் திரட்டப்பட்ட மக்களால் இது சாத்தியப்பட்டது. இதுவரை இருபத்தி ஐந்து மேற்பட்ட சாதிமறுப்பு திருமணங்கள் நடந்துள்ளது.இரு சமூக மக்களும் கிட்டதட்ட ஒரே பொருளதார அந்தஸ்தில் வாழும் நிலையைக்காணலாம்.வன்னியர்கள் சிறு உடமையாளர்களகவும் தலித்துகள் பெங்களூர்,ஓசூர் போன்ற இடங்களில் வேலை செய்யும் கூலித்தொழிலாளிகளாகவும் இருக்கின்றனர்.

       வன்னியர்களும் தலித்துகளும் தர்மபுரி மாவட்ட அளவிற்கு அடர்த்தியாக வாழும் அரியலூர், கடலூர் போன்ற வடமாவட்டங்களில் இது போன்ற திட்டமிடப்பட்ட இரு சமுகத்திடையேயான கலவரங்கள் நிகழவில்லை. இது போன்ற காதல் உடன்போக்குகள் சில நடந்து கொண்டுதானிருக்கின்றன. தர்மபுரியில் மட்டும் ஏன் இந்த திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை. இது கிட்டதட்ட நாற்பது நாட்களாக இருந்த பிரச்சனை.சாதிய மோதல்கள் உணர்வின் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை.கண்முடித்தனமான தாக்குதல் குழந்தைகள் கூட தப்புவத்தில்லை, கற்பழிப்புகள், சூறையாடல், தீயிடல் போன்றவை அதன் வெளீப்பாடு.தர்மபுரியில் சூறையாடல்,தீவைத்தலுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.இதன் பின்ணணியை எப்படி சந்தேகிப்பது. சாதிய அமைப்புகள் தீவிர செயலாற்றியிருக்கின்றன என்ற அளவில்தான் கருதமுடிகிறது.

       அப்பகுதியில் மற்ற மாவட்டங்களில் உள்ள அளவிற்கு சாதி மிக கூர்மையானதாக இல்லை. அம்மாவட்டத்தில் மக்களை சாதி ரீதியாக கூர்மயாக துண்டாட வேண்டிய அவசியம் என்ன? உடன்போக்கான பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொள்ளவில்லை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கூற்று உண்மையா? சாதிய மோதல்கள் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டு ஒழுங்காக நிகத்தப்படும் வன்முறையாக இதுவரை பதிவில்லை அதற்கான சத்தியங்களும் குறைவு.முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு ஆதிக்க படிநிலையில் மேல் நிலையிலுள்ள சாதி தன் கீழ் உள்ள சாதியை பொருளாதார ரீதியாக அதன் உடமைகளை அழிக்கும் புது வடிவத்தை கைகொண்டிருக்கிறது.

      சாதியும் தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கு ஆதாரமாகக் கொண்டுள்ள பரம்பரைத் தொழிற் பிரிவினையும் அவை நிலைத்து நிற்பதற்கான சேவை செய்யும் அகமண முறை, உயர்வு தாழ்வு கற்பித்தல், படிநிலை முறை, பரம்பரை சடங்ககுகள் ஆகியவையாகும்.இது நிலவுடமையின் தன்மை, இந்திய சமூகத்தை எதேச்சதிகாரமிக்கதாக ஆக்குகிறது.இதன் வடிவமாக அரசும் அதன் நிறுவனமும் விளங்குகிறது.இந்த அரசில் பங்குகொள்ளும் கட்சிகளின் தன்மையும் இதைத்தான் பிரதிபலிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. இதற்கு ஏகபோக மூலதனமும் தன் நலனுக்கு ஆதரவாக அமைகிறது.சாதிய கட்டமைப்பை தக்கவைத்து கொள்ள பரம்பரை தொழிற்பிரிவினையையும் அகமண முறையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தம்,நெருக்கடி அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.

தர்மபுரி தலித் மக்கள் பாரம்பரிய தொழிலில் இருந்து விலகியதும் அகமண முறைக்கு எதிராகவும் மாறியதும் சாதியநிலைக்கு எதிரான அம்சங்கள். ஆக இதிலிருந்து விலகும் மக்களை அந்த கட்டமைப்பில் வைத்து படிநிலையை காத்தால் ஒழிய இந்திய சமூக அமைப்பின் ஏதேச்சதிகாரத்தன்மையை காக்க முடியும்.அரசும் அதன் தன்மையோடு இருக்கும்.இதற்கு சாதிய அமைப்புகள் தேவைப்படுகின்றன.எப்போதும் இல்லாத அளவிற்கு சாதிய அமைப்புகள் சலுகைகளை கோரிக்கையாக வைக்காமல் சாதியஅமைப்பை காக்க வேண்டியதை முன்னிலைப் படுத்துகின்றன.

      இன்றைய காதலும் அதன்படி நிகழ்த்தப்படும் திருமணங்களும் சமூக உணர்வோடு நிகழ்வதில்லை."மனிதகுலத்தின் வாழ்தலே நுகர்தல்தான் என்பதாக கட்டமைக்கப்பட்டதால் நுகர்வின் பன்மடிப்புகள் கொண்ட உலகு படைக்கப்படுகிறது. புறயதார்த்தம் என்று சொல்லப்படுகிற இன்றைய உலகு முதலாளித்துவ சந்தைக்கான ஒன்றாக படைத்து காட்டப்படுகிறது. வாழ்க்கையும் சந்தையும் ஒன்றாகிவிட்ட இந்த சூழலில், மனித உடலின் அடிப்படை உரிமையான வாழ்வும், சாவும் முதலாளித்துவத்தின் முதலீடுகளாக மாற்றப்படுகின்றன. பயன்பாடு என்கிற கருத்தாக்கத்தின் வழியாக, மனித உடல்களின் வாழ்க்கை என்பது பயனுள்ளது-பயனற்றது என்கிற இருமைக்குள் சிக்கவைக்கப்பட்டுள்ளது. பயனற்றது சாவதை ஏற்பதும், பயனுள்ளதை வளர்ப்பதும் என்பதாக மாறியதால், முதலாளித்துவம் முன்வைத்துள்ள லாப-வேட்கைகொண்ட வாழ்வின் பயன்பாட்டிற்கானதாக உடல்கள் மாறின. இவ்வாறு, வாழ்வதற்கான உயிர்-ஆற்றலை, சாவதற்கான உடல்-ஆற்றலாக முதலாளித்துவம் முதலீடு செய்வதே அணுஉலை தொழில்நுட்பத்தின் அடிப்படையாக உள்ளது. அதாவது, மனித உடல்களை சாவிற்காக முதலீடு செய்வதே அரசின் இறையாண்மையாக உள்ளது. ”மரண-உலகை“ (death-worlds) மற்றும் “”வாழும்-சவங்களை” (living-deads) உற்பத்தி செய்வதற்காக பேரழிவு ஆயதங்களை உருவாக்கி தனது இறையாண்மையை நிலைநிறுத்துவதே இன்றைய அரசுகளின் செயல்பாடாக உள்ளது[i]. வாழ்விற்கான ஆற்றலை வணிகமயமாக்கிவிட்டு, சாவிற்கான ஆற்றலை கையகப்படுத்திவிட்டன அரசும் அதன் பின்னுள்ள முதலாளிய சக்திகளும். இச்சூழலில் வாழும் மனிதஉடல்கள் ஒவ்வொன்றும் தன்னை ஒரு வணிகச்சின்னமாக (பிராண்டாக)[ii] முன்வைத்து நுகர்வின் வணிகப்போட்டியில் ஈடுபாடு கொள்ள வைக்கப்படுகிறது."ஜமாலன் கூற்றுப்படி வாழ்தலே நுகர்தல்தான் என்பதாக கட்டமைக்கப்பட்டு விட்டதால் நூகர்தலில் தீவிரத்தன்மையாக காதலும், திருமணங்களும் ஆகிவிட்டது.அதற்கு தகவல் தொடர்புகருவிகள், ஊடாகங்களும் நகரங்களின் வளர்ச்சி, கல்வி நிறுவனங்களின் வணிகத்தன்மை,போக்குவரத்து வாகன வளர்ச்சி பயன்படுகின்றன. நூகர்தலின் தீவிரத்தன்மை நீர்த்தப்பொழுது காதலும்,திருமணமும் தோல்வியில் முடிகிறது.இதனால் காதல் சாதி மறுப்பு சுதந்திரத் திருமணங்கள் எதிர்க்கப்படும் நிலைத் தோன்றியுள்ளது.

      சுதந்திர சீனாவில் தலைவர் மாவோ நிறைவேற்றிய ஆணையை இங்கு வாசிப்பது அவசியமாகிறது.அது 1931-ம் ஆண்டு ஜனவரி 28-ம் நாள் வெளியிடப்பட்டது. அது கூறுகிறது "நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தின் கீழ் திருமணம் எண்பது காட்டுமிராண்டித்தனமான மனிதத்தன்மையற்ற ஏற்பாட அமைந்துள்ளது.அடக்குமுறையையும்,துன்பத்தையும் ஆண்களைவிடப் பெண்கள் தான் மிக அதிகமாக எதிர்கொள்கின்றனர்.

   தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் புரட்சியில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து எடுத்து வைக்கப்பட்ட முதலடியான ஆண்கள் மற்றும் பெண்களின் பொருளாதார விடுதலையானது திருமண உறவுகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவற்றை சுதந்திரமானதாகவும் மாற்றுகிறது.இப்போது சோவியத் மாவட்டகளில் திருமணங்கள் சுதந்திரமான முறையில் நடைபெறுகின்றன.சுதந்திரமான தேர்வு தான் ஒவ்வொரு திருமணத்திற்கும் கட்டாயமான அடிப்படை கோட்பாடாக இருக்க வேண்டும்.தங்கள் பிள்ளைகளுக்காக திருமண ஏற்பாடு செய்வதற்கான, அவர்களின் விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்துவற்கான பெற்றோரின் அதிகாரம் உள்ளிட்ட ஒட்டுமொத்த நிலபிரபுவத்த முறையும் திருமண ஒப்பந்தங்களில் நடைபெறும் அனைத்து பொருளாதார ரீதியான கொடுக்கல் வாங்கல்களும் இத்தருணத்தில் இருந்து சட்டப்பூர்வமாக ஒழித்துக் கட்டப்படுகிறது..................மணவிலக்குத் தொடர்பானப் பிரச்சனைகளில் பெண்களைப் பாதுகாப்பதும், மணவிலக்குத் தொடர்பான கடமை மற்றும் பொறுப்புகளின் மிகப்பெரிய பகுதிக்கு ஆண்களைப் பொறுப்பாக்க வேண்டியதும் அவசியமாகிறது...."

    உயர்சாதி ஆதிக்கமுறையை எதிர்த்தும் பரம்பரைத் தொழிற்பிரிவினை, அகமணமுறை, படிநிலை முறை, தீண்டாமை ஆகியவற்றிர்க்கு எதிராக பார்பனிய சைவவேளாள உயர்சாதி ஆதிக்கமுறையை எதிர்த்து ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு ஆதரவாக சீர்திருத்தங்களை கோருவது ஒரு முதலாளித்துவ சனநாயக தன்மை கொண்டது. அது அவசியமாகிறது.

1.சாதிய மோதல்களில் ஈடுபடுவோர் மற்றும் வழக்குகளில் உள்ளவர்கள் அரசின் மூலம் கிடைக்கும் சாதிய அடிப்படையிலான சலுகைகளை ( இட ஒதுக்கிடு உட்பட ) உடன் ரத்து செய்ய வேண்டும்.
2..சாதிய மோதல் உட்பட்ட பகுதியின் அரசு நிறுவனத்தின் அங்கமான வருவாய், நீதித்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள், அலுவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு குற்றவியல் விசாரணைக்கு             உட்படுத்தப்படவேண்டும்.
3.சாதிய மோதல் நிகழத்திக்கொள்ளும் சாதியமைப்பு  தலைவர்கள் மீது குற்றவியல் வழக்குகள் தொடரப்பட்டு நீதிமன்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். அதுவும் வேறு மாநிலத்தில் நடத்தல் வேண்டும்.
4.சாதிய மோதல் நடக்கும் பகுதியில் அதில் ஈடுபடும் மக்களின் ஒட்டுகள் செல்லாதவைகள் என அறிவிக்க வேண்டும்.
5.காதல் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டு குறுகியகாலத்திலேயே மணவிலக்கு கோரும் நிலையில் அதற்கு ஆண்களை பொறுப்பாக்கி இழப்பீடு வழங்க வேண்டும்.
6.காதல் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டோருக்கு அரசு பாதுகாப்பளித்து,மாதம் தோருமான ஊக்கத்தோகை வழங்கி அவர்களின் குழந்தைகளுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் கல்வி வேலை வாய்ப்புகளில் தனி இட ஓதுக்கிடும் தரப்பட வேண்டும்.
7.சாதிய இருக்கமுள்ள பகுதிகளில் கலப்பு குடியிருப்புகளை நிறுவ வேண்டும்.அதற்கு முனைப்பு காட்டும் ஊராட்சிகளுக்கு சிறப்பு தகுதியளித்து அரசின் நலத்திட்டங்களை அறிவித்து விருதும் வழங்க வேண்டும்.

    இப்படியான சனநாயகக் கோரிக்கைகளை முன்னிலை படுத்துவது அவசியமானது என்பதற்கான உரையாடலைத் தொடருவோம்.

No comments:

Post a Comment