Wednesday, December 26, 2018

நடராசர் இசைக்குழு

ஒரு விஷயத்தை படிக்கிறவங்களுக்கு  புரிகிற மாதிரி எழுதனும் என்பதற்கே அவ்வளவு கஷ்ட்டப்பட வேண்டியிருக்கு

எழுத்தில் உள்ளதை ஒவியத்திலோ, சிற்பமாகவோ செய்வதற்கு எவ்வளவு பிரசவ அவஸ்தைப் பட்டிருக்கணும் என்பதை அந்த படைப்பை பார்த்து உணரும் பொழுது தான் தெரிகிறது.
நம்மிடம் இருந்து அழிந்ததை அறிய இலக்கியம் தான் உதவுகிறது.

காரைக்கால் அம்மையார் பாடுகிறார்...
      
துத்தம், கைக்கிளை, விளரி, தாரம், உழை, இளி, ஓசை என்ற ஏழு பண்களையும் இசைத்து, சச்சரி, கொக்கரை, தக்கை, தகுணி, துந்துபி, தாளம், வீணை, மத்தளம் கரடிகை, தமருகம், குடமுழா, மொந்தை முதலிய வாத்திய வகைகளை இயக்கி அத்தன்மையோடு ஆடுகின்ற எங்கள் இறைவன்.

திருவாலங்காட்டில் இப்படித் தான்     ஆடுகிறார் என அம்மை கூறுகிரார்.               

இவற்றை இசைக்கின்ற ஆர்க்கெஸ்ட்ரா கோஷ்டியை சிற்பத்தில் காட்டவும் அதை ஆட்டத்தோடு லிங்க் பண்ணவும் ஆயிரம் வருஷத்துக்கு முன் யோசிச்சதை இந்த சிற்பத்தில் பார்க்கலாம்.           

நந்தி நடராசரின் ஆட்டத்திற்கு ஈடுகொடுத்து மத்தளம் வாசிக்கமுடியாமல் திணறி வேகமாக தட்டுவதைக் காட்ட நந்தியின் கையை ஒன்றுக்கு மேற்பட்டதாகக்      காட்டப்பட்டிருக்கிறது சினிமாவில்               வருவது போல்,                    

கீழே பூதகணங்கள் பூரிப்போடு மகிழ்வோடு ஆளுக்கொரு இசைக்கருவியை தூக்கிக் கொண்டு வாசிப்பது போலக் காட்டப்படிருக்கிறது.

சிற்பி பட்டிருக்கும் அவஸ்தை பார்க்கும் பொழுது உணரமுடியும். அபூர்வ பிரசவம்.

No comments:

Post a Comment